முத்தமிழ் முருகன் மாநாடு விழா மலரை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 விழா மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முத்தமிழ் முருகன் மாநாடு விழா மலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். பழனியில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த முத்தமிழ் முருகன் மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது. தமிழ்க் கடவுளான முருகனின் பெருமையை உலகில் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழநி பழனியாண்டவர் கல்லூரியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த மாநாட்டுக்கு சென்னை முகாம் அலுவலகத்தில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கினார். அப்போது, “அனைவரது நம்பிக்கைக்கும் நன்மை செய்து தரக்கூடிய அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. ஆலய வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும். கருவறைக்குள் மனிதர்களுக்கு இடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் வேண்டும்” எனப் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் சித்த மருத்துவத்தை 'தமிழர் சித்த மருத்துவம்' என அழைப்பது உட்பட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 விழா மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முத்தமிழ் முருகன் மாநாடு விழா மலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இந்த நிகழ்வின்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
-
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications