2 ஆண்டுகளில் ரூ.5,000 கோடி கோயில் சொத்து மீட்பு! இறை நம்பிக்கையாளர்கள் போற்றும் ஆட்சி! -ஸ்டாலின்
சென்னை: 2 ஆண்டுகளில் ரூ.5,000 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இறை நம்பிக்கையாளர்கள் அனைவரும் போற்றும் ஆட்சியாக திமுக அரசு செயல்படுகிறது என அவர் கூறியுள்ளார். சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கிய நிலையில், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று 1000 ஆவது குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளதையும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவர் பகிர்ந்துள்ளார். அதன் விவரம் வருமாறு;
''எல்லார்க்கும் எல்லாம்" என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் அனைத்திலும் சிறப்பாக இருக்கின்றன. 5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை இரண்டு ஆண்டு காலத்தில் மீட்டது திமுக அரசு.
இன்றைய நாள், 1000-ஆவது கோயில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயிலில் நிகழ்த்தியிருக்கிறது இந்து சமய அறநிலையத் துறை. இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
இதற்குக் காரணமான இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு அவர்களையும் -அதிகாரிகளையும் -அலுவலர்களையும் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.''
-
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு












Click it and Unblock the Notifications