பெண் பிள்ளைகள் நிச்சயமாக படிக்க வேண்டும்! சிறகு விரித்துப் பறக்க வேண்டும்! ஸ்டாலின் வேண்டுகோள்!
சென்னை: பெண் பிள்ளைகள் நிச்சயமாக படிக்க வேண்டும் என்றும் வீடுகளில் முடங்காமல் தங்களது தகுதிக்கேற்ற வேலைக்குச் செல்ல வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
2000 பேர் அமரக்கூடிய வகையில், ''கலைஞர்'' பெயரால் மாபெரும் அரங்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் கட்டித் தரப்படும் என்ற உறுதியையும் அவர் அளித்துள்ளார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் என்பதை கடந்து முன்னாள் மாணவர் என்ற முறையில் பங்கேற்று பேசினார் ஸ்டாலின். அதன் விவரம் வருமாறு;

அதிகாரிகளிடம் பேசி
பல ஊர்களில் பல அரசு நிகழ்ச்சிக்கு நான் செல்கிறபோது, ஆங்காங்கே சில அறிவிப்புக்களை அரசின் சார்பில், முதலமைச்சர் என்கின்ற முறையில் நான் வெளியிடுவது உண்டு. ஆக, நான் நேற்றிரவு, நாளை நான் படித்தக் கல்லூரிக்குச் செல்கிறேன். அங்கே சென்று என்ன அறிவிப்புக்களை வெளியிடலாம் என்று அதிகாரிகளோடு கலந்து பேசி, யோசித்துக் கொண்டிருந்தபோது, சில முடிவுகளை எடுத்திருக்கிறோம். அதை இப்போது உங்கள் முன்னால் எடுத்து வைக்க விரும்புகிறேன்.

மாபெரும் அரங்கம்
2000 பேர் அமரக்கூடிய வகையில், நம்முடைய கலைஞர் பெயரால் மாபெரும் அரங்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் கட்டித் தரப்படும்.300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் இங்கே படிக்கிறார்கள். தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் இருந்து அவர்கள் இங்கே வந்து, தங்கிப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கென்று விடுதி கிடையாது. அவர்களுக்கான விடுதி, மாநிலக் கல்லூரி வளாகத்திலேயே அமைத்துத் தரப்படும்.

என் கனவு
பள்ளிகள், கல்லூரிகள் என்பவை படிப்பையும், பாடங்களையும் மட்டுமல்லாமல், மாணவ மாணவியருக்கு அறிவாற்றலையும், தனித்திறமையையும் உருவாக்கும் வகையில் இயங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு. இங்கு மேடையில் அமர்ந்திருக்கும் தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் முனைவர் பொன்முடி அவர்கள் எத்தனை பட்டங்கள் வாங்கி இருக்கிறார் தெரியுமா?

பொன்முடி படிப்பு
கலைஞர் கூட அடிக்கடி அவரை சொல்கிறபோது பொன்முடி என்று சொல்ல மாட்டார், அறிவுமுடி என்று தான் கூப்பிடுவார் பாசத்தோடு. அந்த அளவுக்கு ஆற்றலைப் பெற்றவர். எந்த அவையாக இருந்தாலும், எந்தப் பொருளாக இருந்தாலும், அதைப் பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றலோடு பேசக்கூடிய திறமையைப் பெற்றவர் பொன்முடி. கல்லூரிப் பேராசிரியராக இருந்து, இன்று பல்கலைக்கழகங்களின் இணைவேந்தராக இருக்கிறார் என்றால், இதற்குக் காரணம் அவரது கல்வித் திறனும் அறிவாற்றலும்தான்.
Recommended Video

பெண் பிள்ளைகள்
பெண்கள் கல்வி கற்பது என்பது, வேலைக்குப் போவது என்பதோடு மட்டுமல்ல, அதோடு முடிந்து விடுவது இல்லை, பெண்களுக்குத் தன்னம்பிக்கை அளிப்பதாக, தைரியத்தை வழங்குவதாக கல்வி அமைகிறது. எனவே, பெண் பிள்ளைகள் நிச்சயமாக படிக்க வேண்டும், பட்டங்களைப் பெற வேண்டும். பட்டம் பெற்ற பெண்கள், தங்களது தகுதிக்கேற்ற வேலைக்குச் செல்ல வேண்டும். பெண்கள் தங்களது அறிவாற்றலை வாழ்நாள் முழுக்கப் பயன்படுத்தக்கூடிய சூழலை தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
-
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
சென்னையின் அடுத்த மேயர் நீங்கள் தானா? கேள்வி வந்ததும் திவ்யா சத்யராஜ் முகத்தில் அவ்வளவு சிரிப்பு! -
ரூ.2000 + ரூ.8000.. இல்லத்தரசிகளின் மனதை வெல்லும் திமுக மாஸ்டர் பிளான்.. கூப்பன் தருவது ஏன்? -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
மேயர் பிரியாவுடன் Pose! இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி! சத்யராஜ் மகள் பதிவு! என்னவா இருக்கும்? -
ஸ்டாலின் 6.. கனிமொழி கையில் எடுத்த மேஜிக்.. தேர்தல் போக்கையே மாற்றும் அந்த 6 வாக்குறுதிகள்? -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications