"ஸ்டாலின்தான் நாட்டிலேயே சிறந்த முதல்வர்ன்னு சொன்னாங்க.. மகிழ்ச்சி ஆனாலும்".. மனம்திறந்த முதலமைச்சர்
இன்னுயிர் காப்போம் திட்டத்தை துவக்கி வைத்து முதல்வர் உரையாற்றினார்
சென்னை: இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக முக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஒரு சர்வே கூறியிருந்தது. அதுகுறித்து இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய கருத்தை முதல்முறையாக வெளிப்படுத்தி உள்ளார்.
தமிழகத்தில் திமுக அரசு அமைந்ததும் பல்வேறு அதிரடிகளை அடுத்தடுத்து கையில் எடுத்து நடைமுறைப்படுத்த ஆரம்பித்தது.. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு, இந்தியாவின் முதல்வர்களின் செல்வாக்கு பற்றி சிஎன்ஓஎஸ் ஒபினியோம்' என்ற அமைப்பு சில தினங்களுக்கு முன்பு சர்வே ஒன்றை நடத்தியது..
அதில், நாட்டில் சிறந்த முதலமைச்சர்களாக தேர்ந்து எடுக்கப்பட்ட ஐந்து முதலமைச்சர்களில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் முதலிடம் பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சர்வே
இதுகுறித்த அந்த சர்வேயில், "தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நாட்டிலேயே மிகவும் மக்கள் செல்வாக்கு பெற்ற முதல்வராக திகழ்கிறார். இந்த கணக்கெடுப்பில் அவர் பெற்றுள்ள நிகரப் புள்ளிகள் 67ஆகும்... அவருடைய மாநிலத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டவர்களில் 79 சதவிகிதம் பேர் அவருடைய தலைமையில் திருப்தி அடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்... ஆனால், 12 சதவிகிதம் பேர் அவருடைய செயல்பாடு திருப்தி இல்லை என்று சொல்லி உள்ளனர்.

கணக்கெடுப்பு
இந்த கணக்கெடுப்பில் திருப்தி அடைந்தவர்களின் சதவிகிதத்தில் திருப்தி இல்லை என்று சொல்பவர்களை கழித்து மீதமுள்ளவர்களே நிகர ஆதரவாளர்களாகக் கணக்கிடப்படுகிறது. அதன்படி "தமிழக முதல்வர் ஸ்டாலின் நிகரப் புள்ளிகள் 67 பெற்று இந்தியாவிலேயே தலைசிறந்த மக்கள் செல்வாக்கு பெற்ற முதலமைச்சராக முதலிடம் பெற்றுள்ளார்' என்று அந்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சில வருடம் திமுக ஆட்சியில் இல்லாத நிலையில், முதல்முறையாக ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற நிலையில், மிக குறுகிய நாட்களில் இப்படி ஒரு சாதனையை பெற்றது அனைத்து தரப்பினராலும் ஈர்க்கப்பட்டது.

இன்னுயிர் காப்போம்
இதுபற்றி இதுவரை முதல்வர் ஸ்டாலின் எந்தவிதமான கருத்தையும் சொல்லாமல் இருந்த நிலையில், இன்று முதல்முறையாக பேசி உள்ளார்.. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் 'இன்னுயிர் காப்போம்' என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதற்காக தமிழகம் முழுதும் 610 மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த இன்னுயிர் காப்போம் இத்திட்டத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டில் எந்தப் பகுதியில் விபத்து நடந்தாலும் விபத்து நடந்த பகுதியில் விபத்துக்கு உள்ளானவரை மருத்துவமனையில் சேர்க்கும் நபருக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகையும், விபத்தில் சிக்கியவருக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் சிகிச்சையும் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சி
இந்த திட்டங்களை துவக்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, "பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாநில முதல்வர்கள் என்று ஒரு கருத்துக்கணிப்பில் எடை போட்டார்கள்... அதில், இந்தியாவில் உள்ள முதல்வர்களில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின்தான் என்று செய்திகளும் போட்டார்கள்.. இதில் எனக்கு மகிழ்ச்சிதான்.. உங்களுக்கும் மகிழ்ச்சிதான்.. தமிழ்நாட்டுக்கும் மகிழ்ச்சிதான்.. இந்தியாவிலேயே இருக்கக்கூடிய முதல்வர்களில் முதலிடம் என்று சொல்வதைவிட, அதைவிட பெருமை எனக்கு என்ன தெரியுமா?

முதலிடம்
தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது என்று சொல்ல வேண்டும்.. கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி, ஏற்றுமதி, மகளிர் மேம்பாடு, சமூக வளர்ச்சி போன்றவற்றில் தமிழகம் முன்னிலை மாநிலமாக இருக்க நாம் முன்னிலை மாநிலமாக இருக்க நாம் பாடுபட்டு கொண்டிருக்கிறோம்.. இதேபோல, வறுமை, பசி, குற்றங்கள் நடப்பதில், சாலை விபத்துகள் போன்றவற்றில் குறைந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று முதல்வர் தெரிவித்தார்.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications