தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் பாக்கர் மறைவு: முதல்வர் ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், திருமாவளவன் இரங்கல்!
சென்னை: இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் எஸ்.எம். பாக்கர் உடல்நலன் குறைவால் காலமானார். எஸ்.எம். பாக்கர் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், எஸ்.எம். பாக்கர் மறைவெய்திய செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் அமைப்பினருக்கு ஆழ்ந்த இரங்கல், ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: அகில இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.எம். பாக்கர் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவரான எஸ்.எம். பாக்கர் சிறந்த பேச்சாளர். அனைத்து சமூகங்களுடனும் இஸ்லாமியர்கள் நல்லுறவுடன் வாழ வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டவர். பழனிபாபாவுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தவர். மருத்துவர் அய்யா அவர்கள் மீது மதிப்பும் பற்றும் கொண்டிருந்தவர். தைலாபுரம் தோட்டத்திற்கு பல முறை வந்து மருத்துவர் அய்யா அவர்களை சந்தித்து உரையாடியவர். பொதுசிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் என்னுடன் கலந்து கொண்டவர். அவரது மறைவு தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு பேரிழப்பாகும்.
எஸ்.எம். பாக்கர் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்ட இரங்கல் செய்தி: இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர் அவர்களின் மறைவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இசுலாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினரின் நலன்களுக்காகவும் தலித்துகள் உள்ளிட்ட அனைத்து விளிம்புநிலை மக்களின் பாதுகாப்புக்காகவும் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாகப் பாடாற்றியவர். 1990-களின் தொடக்க காலத்தில் மதுரை மண்ணில் தலித்துகளுக்கான போராட்டக் களங்களில் எனக்கு அறிமுகமானார். அதுமுதல் இதுநாள் வரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் தோழமை போற்றியவர். தனிப்பட்ட முறையில் என்மீதும் பேரன்பு காட்டியவர். அவருடைய இறுதி நிகழ்வில் என்னால் பங்கேற்க இயலவில்லை என்பது மிகுந்த கவலையளிக்கிறது.
கள்ளக்குறிச்சியில் நடந்துள்ள நச்சு சாராய சாவுகளையொட்டி பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நேற்றும் இன்றும் ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கும் நெருக்கடியான சூழலில் சென்னைக்கு செல்ல இயலவில்லை. எனினும் கட்சியின் முன்னணி தோழர்கள் அவருக்கு நேரில் வீரவணக்கம் செலுத்துகின்றனர்.
அவருடைய மறைவு இசுலாமிய சமூகத்திற்கு மட்டுமின்றி விளிம்புநிலை மக்கள் யாவருக்கும் நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாத் இயக்கத் தோழர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மறைந்த எஸ்.எம். பாக்கர் அவர்களுக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.
-
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications