பில்டர்களுக்கு அடுத்த அதிர்ச்சி.. மணல், சிமெண்ட், செங்கல், எம் சாண்ட் விலை கடுமையாக உயர்வு
சென்னை: கட்டுமான பொருட்களின் திடீர் தட்டுப்பாட்டால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தலையிட வேண்டும் என்று பில்டர்கள் அசோசியேஷன் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் மணல் குவாரிகளில் நடத்தப்பட்ட சோதனையால், கட்டுமான பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. கட்டுமானத்துக்கு தேவையான ஆற்று மணல் 3 யூனிட் ரூ.40 ஆயிரம் வரை உயர்ந்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.. எம்சாண்ட் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இது தவிர அரசு நிர்ணயித்த விலையைவிட ரூ.120 அதிகம் என்கிற அளவிலேயே சிமெண் மூட்டைகள் தமிழ்நாட்டில் கிடைப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. ப்ளு மெட்டல் உள்பட பல்வேறு கட்டுமான பொருட்களுக்கு தமிழ்நாட்டில் தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறப்படுகிறது
சிமெண்ட், எம் சாண்ட், செங்கல் என முக்கியமான கட்டுமான பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து உள்ளதாகவும் கட்டுமான துறையினர் கவலை அடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலையிட வேண்டும் என்று பில்டர்கள் அசோசியேஷன் கோரிக்கை வைத்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
உள்ளூர் கடைகளில் சிமெண்ட் ஒரு மூட்டை ரூ.440-க்கு விற்கப்படுகிறது. இது அரசு நிர்ணயித்த விலையைவிட ரூ.120 அதிகம். மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ப்ளு மெட்டல், எம்சாண்ட் ஆகிய வற்றின் விலை உயர்வு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
அரசு கட்டிடங்கள், வீடுகள், பாலங்கள், சாலைகள் மற்றும் நீர்வழிகள் உள்ளிட்ட உள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. செங்கற்கள் தட்டுப்பாடு காரணமாக விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது ஒப்பந்ததாரர்களுக்கு சவாலாக உள்ளது. இது பண்டிகை காலங்களில் ஏராளமான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும்.
உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கட்டுமான தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்லக்கூடும். இதனால் அவர்கள் திரும்பியவுடன் கட்டுமான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதில் குறிப்பிடத்தக்க தாமதம் ஏற்படும்.
கட்டிட அனுமதி வழங்குவதை முறைப்படுத்தவும் கால தாமதத்தை குறைக்கவும் வேண்டிய தேவையும் உள்ளது. அனுமதி வழங்குவதற்கு 30 நாட்கள் காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும். பொதுமக்கள் மற்றும் கட்டுமானத் துறையின் சுமையை குறைக்க 100 சதவீதம் உயர்த்தப்பட்ட கட்டிட திட்ட ஒப்புதல் கட்டணம் மற்றும் உள் கட்டமைப்பு மாற்றங்களில் சமீபத்திய அதிகரிப்பு ஆகியவற்றை மறு பரிசீலனை செய்ய வேண்டும்" இவ்வாறு பில்டர் அசோசியேஷன் தனது மனுவில் கூறியுள்ளது.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications