ஆரம்பிக்கலாங்களா.. தெற்கிலிருந்து வரும் இந்தக் குரலுக்காகக் காத்திருங்கள்.. முதல்வர் மாஸ் பேச்சு
சென்னை: 2024ஆம் ஆண்டில் முடியப் போற பாஜக ஆட்சி இந்தியாவை எப்படி எல்லாம் உருக்குலைத்திருக்கிறது; எதிர்காலத்தில் நாம் கட்டமைக்க விரும்புகின்ற சமத்துவ சகோதரத்துவ இந்தியா எப்படி இருக்கும் என்று ஒரு ஆடியோ சீரியஸில் பேசப் போகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்தி வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்கட்சியினர் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி என்று பெயர் வைத்துள்ளனர். 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து INDIA என பெயரிடப்பட்டுள்ள இந்தக் கூட்டணியில் முதல் 2 ஆலோசனைக் கூட்டங்கள் முறையே பீகார் மாநிலம் பாட்னா மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகளின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தேர்வு , தொகுதி பங்கீடு, கூட்டணிக்கான இலச்சினை குறித்து விவாதிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்தியா கூட்டணி கட்சிகளின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று தொடங்க உள்ளது . மூன்றாவது கூட்டத்தில் புதிதாக இரண்டு கட்சிகள் இணைந்துள்ளன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சரத்பவார், நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்க மும்பை செல்லும் முன்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அவருடைய எக்ஸ் பக்கத்தில் 'ஆரம்பிக்கலாமா வணக்கம்... என்று கூறி தொடங்கிய வீடியோவை பதிவிட்டுள்ளார். கடந்த சில மாதமாக உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் கேள்வி பதில் வடிவத்தில் பல விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன். திமுக 75வது ஆண்டு நெருங்கிக் கொண்டிருக்கும் பழம்பெரும் கட்சி. இந்திய நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சி என்று குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
அண்ணா, கலைஞர் என்று இந்திய நிலப்பரப்பில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்களால் உருவாக்கப்பட்ட உடன் பிறப்புகள் நாங்கள். இப்பொழுது இந்தியாவுக்காக பேச வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம்.
2024ஆம் முடியப் போற பாஜக ஆட்சி இந்தியாவை எப்படி எல்லாம் உருக்குலைத்திருக்கிறது; எதிர்காலத்தில் நாம் கட்டமைக்க விரும்புகின்ற சமத்துவ சகோதரத்துவ இந்தியா எப்படி இருக்கும் என்று ஒரு ஆடியோ சீரியஸில் பேசப் போகிறேன். அதற்கு 'ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா' என்ற தலைப்பு வச்சுக்கலாமா? தெற்கிலிருந்து வரும் இந்தக் குரலுக்காகக் காத்திருங்கள்' என அந்த ஆடியோ முடிகிறது.
INDIA கூட்டணி கட்சிகள் 3 ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று தொடங்க உள்ள நிலையில், விக்ரம் பட பாணியில் முதல்வர் ஸ்டாலின் X தளத்தில் பதிவிட்டுள்ள வீடியோ பதிவு அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications