சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதே இடம்.. அதே ரூம்.. "அவரை" போலவே.. முதல்வர் ஸ்டாலினுக்கு வந்த சான்ஸ்.. பரபரக்கும் டெல்லி விசிட்

முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு இல்லத்தில் சூட் அறையில் தங்க போகிறார்

Google Oneindia Tamil News

சென்னை: டெல்லி சென்றுள்ள முதல்வர் முக ஸ்டாலின், அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்க போகிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வந்தன.. ஆனால், இது தொடர்பாக மேலும் சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெல்லியில் "தமிழ்நாடு இல்லம்" என்ற பெயரில் அரசு விடுதி ஒன்று காமராஜர் காலத்தில் கட்டப்பட்டது.. தமிழகத்தில் டெல்லி செல்லக்கூடிய ஆளுநர்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் யார் டெல்லி சென்றாலும், இங்குதான் தங்குவார்கள்.

இணையதள சேவையை முடக்குவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.. ஜி 7 நாடுகள், இந்தியா வெளியிட்ட கூட்டறிக்கை இணையதள சேவையை முடக்குவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.. ஜி 7 நாடுகள், இந்தியா வெளியிட்ட கூட்டறிக்கை

கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியில் இந்த கட்டிடம் மேம்படுத்தப்பட்டது.. அதன்படி, ஆளுநர் அல்லது முதல்வர்கள் தங்குவதற்கு வசதியாக சூட் ரூம் ஒன்று ஸ்பெஷலாக ஏற்படுத்தப்பட்டது..

 ஜெ.மறைவு

ஜெ.மறைவு

இந்த சூட் ரூமில், பெட்ரூம், பாத்ரூம், டைனிங் ஹால், ரிசப்ஷன், மேக்கப் ரூம், குட்டி சமையலறை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இத்தனை வசதிகள் அமைந்தபிறகு, கடந்த 2016, ஜுன் மாதம் பிரதமர் மோடியை சந்திக்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதா டெல்லி சென்றிருந்தார்.. அப்போது இந்த சூட் ரூமில் தான் தங்கினார்... ஜெயலலிதா மறைவுக்குபின் ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றபோதும் சரி, அதற்கு பிறகு 4 வருஷம் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோதும் சரி, டெல்லி சென்றாலும், இந்த ரூமை பயன்படுத்தவில்லை..

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி


ஆனால், கடந்த ஜனவரி மாதம் டெல்லி சென்றிருந்த எடப்பாடி பழனிசாமி, இந்த சூட் ரூமை பார்வையிட்டு சென்றாராம்... அடுத்தமுறை மறுபடியும் டெல்லி வரும்போது, இந்த ரூமில்தான் தங்குவேன் என்றும், அதற்காக சில வசதிகளை செய்துவையுங்கள் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டும் சென்றாராம்.. ஆனால், அவர் நம்பிக்கை எல்லாம் நிராசையாகிவிட்டது என்பது வேறு விஷயம்.

உதவிகள்

உதவிகள்

இப்போது முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்ற நிலையில் முதல்முறையாக டென்று சென்றுள்ளார்.. பதவியேற்ற ஒரு மாதத்திற்குள் யாராக இருந்தாலும் டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய துறை அமைச்சர்களை சந்தித்து, தங்கள் மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை கேட்டு வாங்கி வருவது வழக்கம்.. ஆனால், இங்கு தொற்று அதிகமாகிவிடவும், இந்த பயணம் கொஞ்சம் லேட்டாகிவிட்டது..

 அதே ரூம்

அதே ரூம்

அதனால், இன்றுதான் முதல்வர் பிரதமரை சந்திக்க போகிறார்.. மொத்தம் 3 நாள் முதல்வர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்க போவதாக சொல்லப்பட்டது.. ஆனால், அதை பற்றி வேறு தகவல்கள் வெளியாகவில்லை.. இப்போது, ஜெயலலிதா தங்கிய அதே சூட் ரூமில் ஸ்டாலினும் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 சூட் ரூம்

சூட் ரூம்

இதற்காக பொதுப்பணித்துறையினர் சில பராமரிப்பு பணிகளை முன்னதாகவே மேற்கொண்டிருந்தனர்.. முதல்வரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளிடமும் சூட் ரூம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.. இனி இந்த 3 நாளும் ஸ்டாலின் அந்த ரூமில்தான் தங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதன்மூலம் ஜெயலலிதாவிற்கு பிறகு சூட் ரூமில் தங்கும் முதல்வராக ஸ்டாலின் மாறியுள்ளார்.

English summary
CM MK Stalin will stay at Jayalalithas suit room in Delhi Tamilnadu house
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X