திமுகவுக்கு எதிராக.. சிபிஐ, தேர்தல் ஆணையம் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன! பாஜக மீது ஸ்டாலின் தாக்கு
சென்னை: திமுகவுக்கு எதிராக அமலாக்கத்துறை(ED), வருமான வரித்துறை(IT), மத்திய புலனாய்வுத் துறை(CBI), இந்திய தேர்தல் ஆணையம்(ECI) ஆகியவை பயன்படுத்தப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார்.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், கட்சி நிர்வாகிகளுடன் பேசிய ஸ்டாலின், பாஜகவின் தாக்குதலுக்கு எதிராக நான் உறக்கமின்றி பணியாற்றுவதை போல, நீங்களும் பணியாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றிப்பெற வேண்டும் என்கிற இலக்கோடு திமுக பணியாற்றி வருகிறது. இதற்கான வியூகங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் செயல்பாடுகள் குறித்து இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இந்த கூட்டத்தில் தத்தமது மாவட்டத்திற்குட்பட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்ச் செயலாளர்கள் - சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் - தொகுதி பார்வையாளர்கள் - தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரை மாவட்ட செயலாளர்கள் ஓரிடத்தில் அமர வைத்து கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டுமென திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டிருந்தார். இதற்கு ஏற்ப மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
முழு கிணற்றை தாண்ட வேண்டும்
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பாதுகாக்கும் நோக்குடன் பசி, தூக்கம், குடும்பம் ஆகியவற்றை மறந்து துறந்து எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். நம் இவ்வளவு கஷ்டப்பட்டு இருந்தாலும், பாதி கிணறுதான் தாண்டி இருக்கிறோம். ஆவணங்கள் சரி பார்த்து, பணிகள் நிறைவடைந்து நமது மக்களின் பெயர்கள் விடுபடாமல் வாக்காளர் பட்டியலில் வந்தால்தான் முழு கிணற்றையும் தாண்டியதாக கருத முடியும்.
உண்மை இதுதான்
தற்போது நாம் முன்னெடுத்து இருக்கும் 'என் வாக்குச்சாவடி-வெற்றி வாக்குச்சாவடி' என்கிற பணி நமது வெற்றி உறுதிப்படுத்தும். எனவே, அனைவரும் மிகுந்த தீவிரத்துடன் பணியாற்ற வேண்டும். உங்கள் ஆற்றலுக்கும் உழைப்புக்கும் முன் எவராலும் நிற்க முடியாது. எத்தனை எதிரிகள் வந்தாலும், எத்தனை அணிகள் செயல்பட்டாலும், தமிழ்நாட்டை மீண்டும் ஆளப்போவது உதயசூரியன்தான். உங்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் நான் இதை கூறவில்லை, இதுதான் உண்மை.
திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மூலம், தமிழ்நாடு முழுவதும் 1.86 கோடி மக்கள் நேரடியாக பயனடைந்து வருகின்றனர். முந்தைய ஆட்சி காலங்களில் மழை பெய்தாலே உதவிக்காக காத்திருந்த நிலை தற்போது மாறியிருக்கிறது. நிவாரண பொருட்கள் மற்றும் உணவு வழங்கும் முறை எவ்வாறு மாற்றம் அடைந்துள்ளது என்பதை மக்களுக்கு களத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும்.
மீண்டும் ஆட்சி அமைப்போம்
நமது சிறப்பான பணியை பார்த்து, நடுநிலை வாக்காளர்களும் இன்று நமக்கு ஆதரவாக நிற்கின்றனர். மொத்தமாக பயனாளர்கள், கழகத்தினர், நடுநிலை வாக்காளர்கள் என சேர்த்தால் 2.50 கோடி வாக்குகளை தாண்டுவது சாத்தியம். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் நமது கூட்டணி பெற்ற வாக்குகள் 2.09 கோடி. இந்த முறை அதைவிட கூடுதலான வாக்குகளை பெறுவது உறுதி. இந்த புள்ளி விவரங்களை முன்வைத்து, உங்கள் களப்பணியின் மீது உள்ள நம்பிக்கையோடு தெளிவாக கூறுகிறேன் நாம்தான் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளோம்.
எதிரிகளின் சூழ்ச்சி
இத்தனை சாதகமான சூழ்நிலைகள் இருந்தாலும், நம் எதிரிகளை குறைத்து மதிப்பிடக்கூடாது. சிபிஐ, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் இவை அனைத்தும் அவர்கள் நமக்கு எதிராக பயன்படுத்துவார்கள். தினம்தோறும் ஏராளமான பொய்கள், போலியான பிம்பங்களை உருவாக்குவார்கள், பரப்புவார்கள். ஊடகங்களை பயன்படுத்தி, பொய் செய்திகளை பேசுவார்கள். இவற்றை எதிர்கொள்ள நமது பலத்தை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். கொள்கைதான் நமது பலம். நிர்வாகிகள்தான் நமது பலம். தீயாக உழைக்கும் கழக உடன்பிறப்புகள்தான் நமது பலம். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள கழக கட்டமைப்புதான் நமது பலம்" என்று பேசியுள்ளார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications