3 நாட்களில் 3 மெகா சம்பவங்கள்.. அடித்து ஆடும் முதல்வர் ஸ்டாலின்.. திமுக போடும் கணக்கு!
சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், 3 நாட்களில் 3 மெகா சம்பவத்தை முதல்வர் ஸ்டாலின் செய்திருக்கிறார். நேற்று அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய அறிவிப்பு வெளியான நிலையில், இன்று பொங்கல் பரிசுத் தொகை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதேபோல் மாணவர்களுக்கான லேப்டாப் திட்டம் நாளை தொடங்க உள்ளது. இதனால் தேர்தல் ரேஸில் மற்ற கட்சிகளை விடவும் திமுக முந்தி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு நெருங்கிட்ட சூழலில், அத்தனை கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்த தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக நடிகர் விஜய் களத்திற்கு வந்துள்ளதால், வெற்றி மற்றும் தோல்விக்கு இடையிலான வித்தியாசம் மிகவும் குறைந்த அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் களத்தில் தீவிரமாக இயங்கி வருகின்றன. திமுக தொடர்ந்து 2வது முறையாக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. அதற்கேற்ப ஒவ்வொரு வாரமும் ஒரு திட்டத்தை தொடங்கி வைப்பதோடு, கட்டி முடிக்கப்பட்ட திட்டங்களையும் ஸ்டாலின் திறந்து வைத்து வருகிறார்.
கோவை செம்மொழி பூங்கா, மதுரை வேலு நாச்சியார் மேம்பாலம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நெல்லை பொருநை அருங்காட்சியகம், சென்னை வொண்டர்லா, வேலூர் டைடல் பார்க், கோவை மற்றும் மதுரை ஹாக்கி மைதானங்கள், கோவை ஜிடி நாயுடு மேம்பாலம் என்று கடந்த சில மாதங்களில் ஸ்டாலின் ஏராளமான திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் புத்தாண்டுக்கு பின் ஸ்டாலின் பல்வேறு மெகா அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். நேற்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் மூலமாக அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகால போராட்டத்தை ஸ்டாலின் முடிவுக்கு கொண்டு வந்தார்.
அதேபோல் நாளை 10 லட்சம் மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. பிப்ரவரி மாத இறுதிக்குள் 10 லட்சம் மாணவர்களுக்கும் இலவச லேப்டாப்களை கொடுத்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் அனைவரும் எதிர்பார்த்த பொங்கல் பரிசுத்தொகை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள அரிசு அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரொக்கமாக ரூ.3 ஆயிரம் கொடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சாமானிய மக்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பாக கருதப்பட்ட சூழலில், இன்று அறிவித்திருப்பது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் வரவேற்பை பெற்று வருகிறது.
ஆனால் ஸ்டாலினின் இந்த அறிவிப்புகள் நிற்கப் போவதில்லை என்று பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்குவதற்கு முன்பாக இன்னும் சில சர்ப்ரைஸ்களை ஸ்டாலின் அளிக்க திட்டமிட்டுள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். பொங்கல் பண்டிகை முடிவடைந்த பின் அவை ஒவ்வொன்றாக செயல்படுத்தப்படலாம் என்று பார்க்கப்படுகிறது.
-
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார் -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி












Click it and Unblock the Notifications