ஏதோ நடக்குது? சரியில்லையே? உளவுத்துறையை களமிறக்கும் ஸ்டாலின்.. கைக்கு போன முக்கியமான வேலை!
சென்னை: சென்னையில் புயல் வெள்ளம் காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். இந்த நிலையில்தான் ஆளும் திமுக முக்கியமான சர்வே ஒன்றை எடுக்க முடிவு செய்துள்ளதாம்.
மிக்ஜாம் புயலை தொடர்ந்து சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு.. தற்போது பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளது. முக்கியமாக நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் வடிந்துள்ளது. அண்ணா சாலை, ஜிஎஸ்டி சாலை வெள்ளம் இன்றி காணப்படுகிறது. அதேபோல் சாலையின் உட்பகுதிகளிலும் பல இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளது.

ஆனால் ஒரு சில ஏரியாக்கள் இன்னும் வெள்ளத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவில்லை. மடிப்பாக்கம், வேளச்சேரி, திருவான்மியூர், ஐடி ஏரியா பகுதிகள் மொத்தமாக இன்னும் வெள்ளத்தில் சிக்கி உள்ளன. இந்த பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் இருந்து தப்பிக்கவில்லை. இப்போதும் சென்னையில் பள்ளிக்கரணை, வேளச்சேரி போன்ற பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
வெள்ளம் வடியாத பகுதிகள்: கடலில் புயல் நின்றதால் காற்று காரணமாக அலைகள் அதிகம் இருந்தன. இதனால் ஆற்று நீர் கடலில் சேர முடியவில்லை. ஆறு நிரம்பியதால்.. கால்வாய் நீர் எங்கும் கடலில் கலக்க முடியவில்லை. இதனால் சென்னை வெள்ள நீர் கால்வாய்கள் அமைப்புகள் எல்லாம் அப்படியே முடங்கி போனது. இதுவே தண்ணீர் நீண்ட நேரம் தேங்கி இருக்க முக்கிய காரணம் ஆகும்.
அரசுக்கு எதிரான கருத்துக்கள்: இந்த வெள்ளம் காரணமாக அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள், விவாதங்கள் வைக்கப்பட்டன. இதனால் சமூக வலைத்தளங்களில் அரசு மீது கடும் அழுத்தம் எழுந்தது. களத்திலும் கூட தமிழ்நாடு அரசு மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
முக்கியமாக எம்எல்ஏக்கள் சிலர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து.. நாங்கள் களத்திற்கு சென்றோம். அங்கே நிலைமை மோசமாக இருக்கிறது. அரசுக்கு எதிரான கருத்துக்களோடு மக்கள் இருக்கிறார்கள். வெள்ளம் ஏற்பட்டதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வேகமாக மீட்பு பணிகளை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
லோக்சபா தேர்தலில் கண்டிப்பாக இது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். நமக்கு எதிராக சூழ்நிலை திரும்பும் வாய்ப்புகள் உள்ளன என்று கூறி இருக்கிறார்களாம். இதனால்தான் உடனுக்குடன் வெள்ள நிவாரண நிதியாக ரூ. 6000 கொடுக்க அரசு முடிவு செய்துள்ளதாம்.
குறைவான தொகை: முதலில் குறைவாக தொகை.. அதாவது ரூ. 4000 வரை கொடுக்கலாம் என்ற திட்டத்தில்தான் அரசு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் மக்கள் மனநிலை கோபமாக உள்ளது என்பதை உணர்ந்து கொண்டே கூடுதல் தொகை கொடுக்கும் முடிவை அரசு எடுத்துள்ளதாம்.
இந்த நிலையில்தான் ஆளும் திமுக முக்கியமான சர்வே ஒன்றை எடுக்க முடிவு செய்துள்ளதாம். உளவுத்துறை மூலம் இந்த சர்வே எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. சென்னை மட்டுமின்றி மாநிலம் முழுக்க மக்கள் மனநிலை எப்படி உள்ளது.
வெள்ள பாதிப்புகளை கையாண்டது, மகளிர் உரிமை தொகை, திமுக கொண்டு வந்த சட்டங்கள், ஆளுநர் - அரசு மோதல், இலவச பெண்கள் டிக்கெட், காலை உணவு திட்டம் இவை எல்லாம் என்ன மாதிரியான மாற்றங்கள் மக்கள் இடையே ஏற்படுத்தி உள்ளது என்பதை பற்றி சர்வே எடுக்க அரசு முடிவு செய்துள்ளதாம். 2024 லோக்சபா தேர்தலை மனதில் வைத்த முதல் கட்டமாக இந்த சர்வேவை எடுக்க அரசு திட்டமிட்டு உள்ளதாம்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications