கொளுத்தி எடுக்கும் கோடை.. 22 மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம்.. ரூ 150 கோடி ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தில் கோடை காலத்தில் குடிநீர் விநியோகம் செய்ய ரூ. 150 கோடி ஒதுக்கீடு செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவியது. இதனால் பெங்களூரில் பிழைப்புக்காக சென்றவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பும் நிலை ஏற்பட்டது. இயற்கை உபாதைகளை கழிக்கக் கூட பக்கத்தில் உள்ள மால்களுக்கு செல்லும் நிலை இருந்தது.

இதனால் தோட்டங்களுக்கு தண்ணீர் விட்டு வீணடிக்கக் கூடாது என்றும் வாகனங்களை தண்ணீர் விட்டு கழுவக் கூடாது என்றும் கர்நாடகாவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அடுக்குமாடி குடியிருப்புகளில் தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர்.
அந்த வகையில் சென்னையிலும் கோடையில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளது. குடிநீர் ஆதாரமாக உள்ள ஏரிகளில் முழு கொள்ளளவில் கடந்த வார நிலவரப்படி 57 சதவீதம் மட்டுமே நீர் இருந்தது. பூண்டி, சோழவரம், புழல், தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.2 டிஎம்சியாக இருந்தது.
தற்போது வீராணம் ஏரி வற்றிவிட்டது. தமிழகத்தில் கடலூர், கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் வெயில் அதிகமாகவே வாட்டி எடுக்கிறது. இதனால் தண்ணீர் பஞ்சத்தை போக்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்றைய தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அந்த கூட்டத்திற்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 22 மாவட்டங்களில் குடிநீர் விநியோகத்திற்கு ரூ 150 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பற்றாக்குறை மாவட்டங்களில குடிநீர் விநியோகத்திற்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வறட்சி பாதித்த மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யவும் கூட்டுக் குடிநீர் திட்டங்கள், நீரேற்று நிலையங்கள் தடையின்றி செயல்பட சீரான மின்விநியோகம் வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications