"பலரின் தலை உருள போகிறது".. அமித் ஷா கேட்ட கேள்வி.. சட்டென பறந்த போன் கால்.. உஷாரான ஸ்டாலின் டீம்!
சென்னை: உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழ்நாடு வருகை, அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வந்திருந்தார். சில வாரங்களுக்கு முன் அவரின் கோவை பயணம் ரத்தான நிலையில், சென்னைக்கு நேற்று தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார்.
தனியார் நிகழ்ச்சியில் நேற்று அமித் ஷா, அதிமுகவின் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார். ஆனால் இவர்கள் தனியாக ஆலோசனை செய்யவில்லை.

அமித் ஷா ஆலோசனை
இந்த நிலையில் தமிழ்நாடு வந்த பாஜக மூத்த தலைவர் உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். பாஜக கமலாலய அலுவலகத்தில் இவர்கள் ஆலோசனை செய்தனர். இந்த ஆலோசனையில் 84 நிர்வாகிகள் வரை கலந்து கொண்டனர். தமிழ்நாடு பாஜக குறித்தும், கட்சி நிர்வாகம் குறித்தும், பூத் கமிட்டி குறித்தும் அமித் ஷா ஆலோசனை செய்து இருக்கிறார்.

அமித் ஷா கேட்டது என்ன?
முக்கியமாக பூத் கமிட்டிகள் குறித்துதான் அமித் ஷா அதிகம் கேள்வி கேட்டு இருக்கிறார். பூத் கமிட்டியை பலப்படுத்துங்கள். பூத் தான் முக்கியம் என்றுள்ளார். அதன்பின் அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாமா? அவர்களின் மெகா கூட்டணி திட்டம் பலன் அளிக்குமா என்றும் அமித் ஷா விசாரித்து உள்ளார். 2024 லோக்சபா தேர்தலுக்கு என்ன செய்யலாம். என்ன மாதிரியான வியூகங்களை வகுக்கலாம் என்று அமித் ஷா ஆலோசனை செய்துள்ளார்.

திமுக பற்றி கேள்வி
இதில்தான் திமுக அமைச்சர்கள் பற்றியும் விவாதம் செய்யப்பட்டு உள்ளது. திமுக அமைச்சர்களுக்கு எதிராக இருக்கும் புகார்கள் பற்றி அமித் ஷா ஆலோசனை செய்து உள்ளார். அதாவது அமைச்சர்கள் சிலருக்கு எதிராக இருக்கும் டெண்டர் புகார்கள், மற்ற முறைகேடு புகார்கள், அவர்களுக்கு எதிராக நிலுவையில் இருக்கும் வழக்குகள் என்று பல விஷயங்கள் பற்றி அமித் ஷா பேசி இருக்கிறார். திமுக தொடர்பாக பேச்சு மட்டும் 15 நிமிடங்களுக்கு மேலாக சென்றுள்ளது.

தொடங்கலாமா?
பல்வேறு மாநிலங்களில் பாஜக அல்லாத கட்சிகளை சேர்ந்த அமைச்சர்கள் குறி வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். ஆனால் இன்னும் தென் மாநிலங்களில் இவர்களின் விசாரணை தொடங்கவில்லை. தமிழ்நாட்டில் இந்த விசாரணை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம். அதை பற்றித்தான் இவர்கள் ஆலோசனை செய்தனர் என்று கூறப்படுகிறது. தென் மாநிலங்கள் பக்கம் இவர்கள் வந்தால் பலரின் தலை உருளும் வாய்ப்புகளும் உள்ளன.

ஸ்டாலின் உஷார்
இந்த பக்கம் அமித் ஷா ஆலோசனை நடத்திய நிலையில் இன்னொரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் தரப்பும் இந்த ஆலோசனைகளை உற்று கவனித்து வந்துள்ளது. அதாவது பாஜகவின் ஆலோசனைகள், பாஜக அமைக்க போகும் கூட்டணி, ஆளும் தரப்பு நிர்வாகிகள் குறி வைக்கப்படுவார்களா, மெகா கூட்டணி எப்படி இருக்கும் என்பது உள்ளிட்ட விஷயங்களை முதல்வர் ஸ்டாலின் தரப்பு உஷாராக கவனித்து வந்துள்ளது. திமுகவினர் சிலரும் இதை பற்றி தீவிரமாக ஆலோசனை செய்துள்ளனர்.

திமுக போனில் ஆலோசனை
நேரில் சந்தித்து ஆலோசனை செய்யாமல் போன் மூலம் இவர்கள் தீவிரமாக ஆலோசனைகளை மேற்கொண்டு உள்ளனர். அதாவது அதிமுக - பாஜக இணைந்து மற்ற கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைக்குமா என்று திமுக மூத்த நிர்வாகிகள் மாறி மாறி போன் போட்டு ஆலோசனை செய்து இருக்கிறார்களாம். அதோடு அமித் ஷா வருகைக்கு பின்பாக பாஜக மூவ் எப்படி இருக்கும், நிர்வாகிகள் என்ன செய்வார்கள் என்பது தொடர்பாகவும் இவர்கள் போன் மூலம் ஆலோசனை செய்து இருக்கிறார்களாம்.
-
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
மீஞ்சூரில் சூறையாடப்பட்ட மாணவி.. வாய் திறப்பாரா ஸ்டாலின்? உச்சகட்ட கோபத்தில் எடப்பாடி பழனிசாமி! -
Delimitation: பொருளாதாரம், நிதி ஆதாரத்தில் பெரிய ஓட்டை விழும்.. தென்னிந்திய மாநிலங்களுக்கு 'இரட்டை தண்டனையா'? -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
மாப்ள சிவசங்கர் தான்.. ஆனால் சட்டை செந்தில் பாலாஜியோடது! திமுகவின் போலி கூப்பன்! அன்புமணி அட்டாக்! -
கடுகடு ராகுல்.. கண்டு கொள்ளாத ஸ்டாலின்! கரையேறுமா காங்கிரஸ்? தனி ரூட் எடுத்துப் பாயும் அறிவாலயம்! -
ஒரு பக்கம் Delimitation.. இன்னொருபுறம் அண்ணா சிலைக்கு மாலை! நாகர்கோவில் மோடி சம்பவம் -
நாகர்கோவிலில் ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடி.. வழிநெடுக பூக்கள் தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி












Click it and Unblock the Notifications