முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு! திருப்தியுடன் வெளியே வருவாரா திருமாவளவன்? மீண்டும் "ஜவ்வுமிட்டாய்"?
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் ஸ்டாலினுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் நிலையில் அரசியல் கட்சிகள் எல்லாம் தொகுதி பங்கீடுகள், கூட்டணி என படுபிஸியாக இருந்து வருகின்றன.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்த முறை 3 தனித் தொகுதிகளையும் ஒரு பொதுத் தொகுதியையும் ஒதுக்குமாறு கேட்டு வருவதாக தெரிகிறது.
எத்தனை இடங்கள்: கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு 2 இடங்களை திமுக ஒதுக்கியது. அதில் சிதம்பரத்தில் பானை சின்னத்தில் தொல் திருமாவளவன் போட்டியிட்டு வென்றார். அது போல் அக்கட்சியை சேர்ந்த ரவிக்குமார் விழுப்புரம் தனி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.
என்ன சின்னம்: கடந்த முறை பானை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற திருமாவளவன் தற்போது தொகுதி மாறுவார் என சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் சிதம்பரம் தொகுதியிலேயே போட்டியிடுவேன் என அறிவித்துள்ளார். ஏற்கெனவே கொங்கு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய முஸ்லீம் யூனியன் லீக் ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் முறையே நாமக்கல், ராமநாதபுரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது.
கூடுதல் தொகுதி: இந்த நிலையில் மார்க்சிஸ்ட் , கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அவர்களுக்கு தலா இரு தொகுதிகளை ஒதுக்க திமுக ஒப்புக் கொண்டது. ஆனால் எந்த தொகுதிகள் என்பது பின்னர் ஆலோசித்து வழங்கப்படும் என திமுக குழு தெரிவித்ததாக மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறியிருந்தன.
இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிதம்பரம், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 தனி தொகுதிகளில் 3 தொகுதிகளையும், பெரம்பலூர், மயிலாடுதுறை ஆகிய பொதுத் தொகுதியில் ஒரு தொகுதியையும் என மொத்தம் 4 தொகுதிகளை கடந்த 12 ஆம் தேதி நடந்த முதல் கட்ட பேச்சுவார்த்தையின் போது கேட்டதாக தெரிகிறது.
விசிக பேச்சுவார்த்தை: ஆனால் திமுகவோ கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு வழங்கியதை போல் இரு தொகுதிகளை கொடுக்க முன் வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் அண்ணா அறிவாலயத்தில் எம்பி திருமாவளவன் செல்லவில்லை.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று திமுக- விசிக இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. அப்போதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், திமுக- விசிக இடையே பேச்சுவார்த்தையில் எந்த பிரச்சினையும் இல்லை. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் ஸ்டாலினை தொல் திருமாவளவன் சந்தித்து பேசி வருகிறார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் உடன்பாடு எட்டப்படுமா இல்லை மீண்டும் இழுபறி நீடிக்குமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த லோக்சபா தேர்தலில் குறைந்தபட்சம் 3 தொகுதிகளையாவது பெற விசிக முயற்சிக்கிறது. ஆனால் திமுகவோ அள்ளி கொடுக்காமல் கடந்த முறை போல் 2 தொகுதிகளையே கொடுக்க முடிவு செய்துள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications