துயர செய்தி.. நீரில் 5 மாணவர் உயிர் போச்சே - ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலா ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், "திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு வட்டம், முதலிபாளையம் கிராமம் மஜரா சிட்கோ, டி நகர் என்ற முகவரியைச் சேர்ந்த இனியவன். தபெ பாலசுந்தரம் (வயது 12) மற்றும் சந்துரு த/பெ பாண்டியராஜன் (வயது 12) ஆகிய இருவரும் நேற்று அப்பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் குளித்த பொழுது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

CM Stalin announce Rs.1 lakh aid to 4 boys family who drowned in water

இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் மத்தூர் உள்வட்டம், பட்ரஅள்ளி தரப்பு, முத்துநகர் என்ற முகவரியைச் சேர்ந்த திரு.முருகன், திருமதி.பார்வதி தம்பதியினரின் குழந்தைகள் செல்வி. புவனா (வயது 11) மற்றும் செல்வன் வினோத் (வயது 7) ஆகியோர் நேற்று பர்கூர் வட்டம், நாகம்பட்டி தரப்பு. எம்.பள்ளத்தூர் ஏரியில் குளித்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினையும் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த நான்கு சிறார்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சேலம் மாவட்டம். ஆத்தூர் வட்டம், முல்லைவாடி கிராமம். வடக்கு காடு, சிலோன் காலனியைச் சேர்ந்த திரு.ரா.பிரவீன், த/பெ. ராமமூர்த்தி (வயது 20) என்ற கல்லூரி மாணவர். நேற்று தனது நண்பர்களுடன் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் கிராமம், ஜேடர்பாளையம் படுகை அணைப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+