கர்நாடகா தண்ணீர் மறுப்பு.. காவிரி உரிமையை காப்பதில் திமுக உறுதி.. தனித்தீர்மானத்தில் முதல்வர் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி உரிமையை காப்பதில் திமுக எப்போது உறுதியாக இருக்கும் என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசினார்.

தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டம் தொடங்கியதும் முன்னாள் சட்டசபை உறுப்பினர்கள் லியாவுதீன் சேட், கே பழனியம்மான், ஆண்ட முத்து, பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம், கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

CM Stalin bring special resolution on Cauvery issue

இதையடுத்து காவிரி நீர் விவகாரம் குறித்து தனித்தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இது அமைந்திருக்கிறது. ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் காவிரி நதி நீர் உரிமையை காப்பதில் திமுக எப்போது உறுதியாக இருக்கும் என்ற உறுதிமொழியை இந்த மாமன்றத்திற்கு முதலில் தெரிவிக்க விரும்புகிறேன்.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு காவிரி டெல்டா விவசாயிகளுக்காக மேட்டூர் அணையானது சீராக திறந்து விடப்பட்டு வருகிறது. 2021 ஆம் ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் நாளன்று திறக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு முன்கூட்டியே மே மாதம் 24 ஆம் தேதி திறக்கப்பட்டது.

காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வாய்க்கால்கள் திட்டமிடப்பட்டு முறையாக தூர்வாரப்பட்டதனால் காவிரி நீர் கடைமடை வரை சென்று பயிர்கள் செழித்தன. இதன் பயனாக 2021- 2022 ஆம் ஆண்டுகளில் 46.2 லட்சம் டன் அளவிலும் 2022- 2023 ஆம் ஆண்டில் 45.9 லட்சம் டன் அளவிலும் காவிரி பாசன பகுதியில் நெல் உற்பத்தி செய்யப்பட்டு மிகப்பெரிய சாதனையை படைத்தோம். உற்பத்தியும் பெருகியது.

உற்பத்தி பரப்பும் விரிவடைந்தது. இந்த சாதனை இந்த ஆண்டும் தொடர்ந்தது. இந்த ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி நிலவரப்படி மேட்டூர் அணையிலிருந்த 69.7 டிஎம்சி நீர் அளவையும் தென்மேற்கு பருவமழை முன்னறிவிப்பையும் கருத்தில் கொண்டு 12.6.2023 அன்று மேட்டூர் அணையை குறுவை பாசனத்திற்காக திறந்து வைத்தோம். மேட்டூர் அணையின் நீர் இருப்பு 50 டிஎம்சிக்கு மேலாக உள்ள போது உழவர்கள் பருவத்தே பயிர் செய்ய ஏதுவாக மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதி திறப்பது வழக்கமாக உள்ளது. அதனை முறைப்படி திறந்து வைத்தோம். திறந்து விடப்பட்ட நீரும் கடைமடை பகுதிகள் வரை சென்றடைந்தது.

கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் குறுவை பயிரை சிறப்பாக பயிரிட முற்பட்டார்கள். இந்த நிலையில் செயற்கையான நெருக்கடியை கர்நாடகா மாநில அரசு உருவாக்கி வருகிறது. கர்நாடகா அரசு நமக்கு வழங்க வேண்டிய தண்ணீரை இந்த மாதம் திறந்துவிடவில்லை. இது தொடர்பாக நாம் எடுத்த முயற்சிகளை இந்த மாமன்றத்தில் சொல்ல வேண்டியது என் கடமை.

கடந்த ஜூன் மாதம் பிலிகுண்டுலுவில் இருந்து நமக்கு கிடைக்கக் கூடிய 9.19 டிஎம்சிக்கு பதிலாக 2.833 டிஎம்சி மட்டுமே வரப்பெற்றோம். இதைத் தொடர்ந்து 3.7.2023 அன்று மாநில அமைச்சர் துரைமுருகன் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சரை நேரில் சந்தித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாதவாரியாக ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் வழங்க வேண்டிய நீரை உடனடியாக வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தினார். மீண்டும் 5ஆம் தேதியும் மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினார்.

தமிழக நீர்வளத் துறை அமைச்சர், தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் 2023- 2024 பாசன ஆண்டானது ஒரு பற்றாக்குறை ஆண்டு என்ற காரணத்தை கூறிய பின்னரும் கர்நாடகா நமக்கு அளிக்க வேண்டிய நீரை அளிக்கவில்லை. இதனால் குறுவை பயிர் பாதிக்கப்படும் என்ற சூழலில் 19.7.2023 அன்று மத்திய ஜல்சக்தி அமைச்சரை உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாதவாரியாக ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் வழங்க வேண்டிய நீரை உடனடியாக வழங்க காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடகாவுக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து ஜூலை 20 ஆம் தேதி மத்திய அமைச்சரை துரைமுருகன் சந்தித்தார். இதன் பின்னரும் கர்நாடகா அரசு உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை. கர்நாடகா அணைகளில் நீர்மட்டம் 56 சதவீதம் அதிகரித்த போதும் பிலிகுண்டுலுவுக்கு 13 சதவீதம் நீரே திறந்துவிடப்பட்டது. கர்நாடகாவில் 4 அணைகளிலும் போதுமான அளவு நீர் இருக்கும் போதும் பாசனத்திற்காக 2 டிஎம்சி தண்ணீரே திறக்கப்பட்டது. கர்நாடகா அரசு செயற்கையான நெருக்கடியை உருவாக்கி வருகிறது. எனவே இதில் மத்திய அரசு தலையிட்டு உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+