"இங்கே வாங்க".. ஸ்டாலினின் ஒற்றை ஆக்சன்.. தேசிய அளவில் கிடைத்த வரவேற்பு.. இதை கவனிச்சீங்களா?
சென்னை: மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களை தமிழ்நாட்டில் விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து இருந்தார். இந்த அழைப்பிற்கு தற்போது தேசிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை வழங்குவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு அரசு எடுத்துவரும் விளையாட்டு மேம்பாட்டு முன்னெடுப்பு திட்டங்களால், தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று வருகின்றனர்.

விளையாட்டுப் போட்டிகளில் திறமைக்கு பெயர் பெற்ற மாநிலமான மணிப்பூரில் உள்ள தற்போதைய நிலையை தமிழ்நாடு மிகுந்த கவலையுடனும், வேதனையுடனும் பார்க்கிறது. மணிப்பூர் எப்போதும் தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான சாம்பியன்களை, குறிப்பாக பெண் சாம்பியன்களை உருவாக்கி வந்துள்ளது. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை அடுத்த ஆண்டு (2024) நடத்துவதற்கான மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியினை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" - எல்லா ஊரும் எனது ஊர். எல்லா மக்களும் எனது உறவினர் என்று நினைத்து, அன்பே வாழ்வின் அடிப்படை ஆதாரம் என்று வாழ்ந்தால். இந்த வாழ்வு மிகவும் இனிமையானதாகத் திகழும் என்ற கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்று வரிகள் தான் தமிழர் பண்பாட்டின் அடையாளமும், அடித்தளமும் ஆகும் அந்த வகையில், தற்போது மணிப்பூர் மாநிலத்தில் ஆசிய விளையாட்டு, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் போன்ற தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு பயிற்சி அளிக்க சாதகமற்ற சூழ்நிலை நிலவுவதால், அம்மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள். வீராங்கனைகள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து பயிற்சிகள் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களை நான் கேட்டுக் கொண்டுள்ளேன்.
இவ்விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் உயர்தர பயிற்சிகள் அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உறுதியளித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும்
வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு வசதிகனை பயன்படுத்திக் கொள்ள அவர்களின் விவரங்களை அதாவது தங்கள் பெயர், முகவரி, அடையாளச் சான்று, தொடர்பு விவரங்கள், விளையாட்டு சாதனைகள் மற்றும் பயிற்சித் தேவைகள் போன்ற விவரங்களுடன் மின்னஞ்சல் ([email protected]) முகவரியில் மற்றும் தொலைபேசி எண். +91-8925903047 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம், என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வரவேற்பு; இந்த அழைப்பிற்கு தற்போது தேசிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதை தேசிய அளவில் நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இது சின்ன விஷயம் என்றாலும் பெரிய அளவில் பலன் கிடைக்கும். இதுதான் உண்மையான செயல்பாடு என்று பாராட்டி உள்ளனர்.
இது சிறப்பான முடிவு. அவர் பல விஷயங்களை யோசித்து இந்த முடிவை எடுத்துள்ளார். அவரை பாராட்டுகிறோம். மற்ற மாநில தலைவர்களும் இதேபோல் சிறப்பாக யோசிக்க வேண்டும், செயல்பட வேண்டும் என்று பாராட்டி உள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம்












Click it and Unblock the Notifications