அனைத்துக் கட்சி கூட்டத்தில் 56 கட்சிகளின் பிரதிநிதிகளையும் வைத்துக்கொண்டு ஸ்டாலின் சொன்ன வார்த்தை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கே பாதிப்பு என்றும், இந்த முக்கியமான பிரச்சனைக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும், தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள் ஆணித்தரமாக எதிர்க்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

mk stalin all party meeting Delimitaion tamil nadu

நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறையின் போது, தமிழகத்தில் உள்ள தொகுதிகள் எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படக்கூடாது, ஒப்பீட்டளவில் மற்ற மாநிலங்களை விட குறைந்துவிடக் கூடாது என்பதற்காக தமிழக அரசு சார்பில், இன்று, தலைமைச் செயலகத்தில், அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அ.தி.மு.க., த.வெ.க., அ.ம.மு.க உள்ளிட்ட 56 கட்சிகள் பங்கேற்றுள்ளன. பா.ஜக, நாம் தமிழர் கட்சி, தமாகா ஆகியவை புறக்கணித்துள்ளன.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், "தமிழ்நாடு மிகப்பெரிய உரிமை போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதை உணர்த்த தான் இந்த அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு என்ற கத்தி தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கிறது. இதனால் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்படும். தமிழ்நாட்டில் தற்போது 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதை குறைப்பதற்கான அபாயம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.

தொகுதி மறுசீரமைப்பைப் பொதுவாக மக்கள் தொகையின் அடிப்படையில்தான் செய்வார்கள். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது இந்தியாவின் மிக முக்கியமான இலக்கு. அந்த இலக்கில் தமிழ்நாடு வெற்றி பெற்றுள்ளது. இதனால் தொகுதி மறுசீரமைப்பில், மக்கள்தொகை குறைவாக இருப்பதால் நமது தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாடு 8 மக்களவை இடங்களை இழக்கும் எனச் சொல்கிறார்கள்.

நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 848 ஆக உயர்த்தப்பட்டு, தற்போதைய விகிதாசாரத்தின்படி மறுசீரமைப்பு செய்யப்பட்டால், கூடுதலாக 22 தொகுதிகள் கிடைக்க வேண்டும். ஆனால், தற்போதைய மக்கள்தொகையின் படி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் 10 தொகுதிகள்தான் கூடுதலாகக் கிடைக்கும். இதனால் 12 தொகுதிகளை இலக்க நேரிடும். அதிக மக்கள் தொகைக் கொண்ட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும். இதனால் தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும்.

இதனால் தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும். இது உறுப்பினர்களின் எண்ணிக்கைப் பற்றிய கவலை இல்லை. தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த கவலை. இந்த சதியை நாம் அனைவரும் சேர்ந்து முறியடிக்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு ஒட்டுமொத்த தென்னிந்தியாவிற்குமே அபாயகரமான செயல்.. இதில் நமக்குள் கருத்துமாறுபாடு இருக்காது என்று நினைக்கின்றேன். இருக்கக்கூடாது என்றும் விரும்புகிறேன்.

இது இந்தியாவின் கூட்டாட்சி அமைப்புக்கும் தென் மாநிலங்களின் அரசியல் உரிமைகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இது இந்திய ஜனநாயகத்தில் தமிழ்நாட்டிற்குக் கிடைக்கும் அரசியல் உரிமைகள் மீதான நேரடித் தாக்குதல். எனவே, இந்த சதியை நாம் அனைவரும் சேர்ந்து முறியடித்து ஆகவேண்டும். இதில் நமக்குள் கருத்து மாறுபாடுகள் இருக்கக்கூடாது என்று விரும்புகிறேன்" எனப் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.

மேலும், இதுதொடர்பான தீர்மானத்தையும் முன்வைத்தார் முதல்வர் ஸ்டாலின். இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கும், தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மக்கள்தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பை அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாக கடுமையாக எதிர்க்கிறது என்ற தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார்.

தொகுதி மறுசீரமைப்பு குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+