"சிம்பு விக்கெட்டை எடுத்தது நான்தான்".. வைரல் ஆகும் முதல்வர் ஸ்டாலின் ஸ்பின் பவுலிங் வீடியோ!
சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'Vibe With MKS' நிகழ்ச்சியில், தான் நட்சத்திர கிரிக்கெட்டில் பங்கேற்று நடிகர் சிம்பு உள்ளிட்ட 3 பேரின் விக்கெட்களை வீழ்த்தியதாக கூறியிருந்தார். தற்போது அந்தப் போட்டியில் முதலமைச்சர் ஸ்டாலின் பந்து வீசி விக்கெட் எடுத்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழ்நாட்டின் இளம் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுடன் 'Vibe with MKS' என்ற பெயரில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல் நிகழ்வை நடத்தினார். இந்த நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டின் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது விளையாட்டு வீரர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், அவருக்கு பிடித்த விளையாட்டு, இளமைக் காலம், விளையாட்டு மீதான ஆர்வம் உள்ளிட்ட பல்வேறு கேள்விளை எழுப்பினர். கேள்விகளுக்கு புன்னகையுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

கிரிக்கெட் தொடர்பாக வீரர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், "எம்சிசி பள்ளியில் படித்த போது ஹாக்கி அணியில் இருந்தேன். ஹாக்கியும் பிடிக்கும். கிரிக்கெட்டும் பிடிக்கும். நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது தெருவில் கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். எனது தந்தையும் எங்களுடன் விளையாடி இருக்கிறார்.
நான் பவுலர். 'ஆஃப் ஸ்பின்' நன்றாக போடுவேன். நான் தலைவருக்கு பவுலிங் போட்டு இருக்கிறேன். அதேபோல பள்ளியில் 'புக் கிரிக்கெட்' விளையாடுவோம். அந்த அளவுக்கு கிரிக்கெட் மீது நான் ஆர்வமாக இருந்தேன். சேப்பாக்கம் மைதானத்தில் சினிமா நடிகர்கள் விளையாடிய நட்சத்திர கிரிக்கெட் போட்டியிலும் நான் விளையாடி இருக்கிறேன். நான் 3 விக்கெட் எடுத்தேன். டி.ராஜேந்தரின் மகன் நடிகர் சிலம்பரசன் எனது எதிரணி. அவரது விக்கெட், நெப்போலியன் விக்கெட்டையும் நான் எடுத்தேன். இன்னொரு விக்கெட் ஞாபகம் இல்லை." எனக் கூறி இருந்தார்.
திராவிட நாயகரின் விக்கெட் கணக்கு இப்போ தொடங்கினது இல்ல, எப்பவோ தொடங்கினது!
— DMK IT WING (@DMKITwing) December 26, 2025
பங்காளிகளும், சங்கிகளும், ஆவலுடன் எதிர்பார்த்த தலைவரின் அசத்தல் பவுலிங் வீடியோ இதோ உங்களுக்காக! 😍🔥
POWERHOUSE @mkstalin 🔥 pic.twitter.com/yg1LFBcNUN
முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடலில் குறிப்பிட்ட அந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் பழைய வீடியோக்களை நெட்டிசன்கள் தேடிப்பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். திமுக ஐடி விங்கும் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளது. இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அந்த வீடியோவில், முதலமைச்சர் ஸ்டாலின், விளையாட்டு சீருடையில் மிகத் துல்லியமாகப் பந்து வீசி விக்கெட்டுகளைச் சரித்துள்ளார். சிம்பு, அனுபம் கெர், நெப்போலியன் ஆகியோரை தனது பவுலிங்கில் சாய்த்துள்ளார் ஸ்டாலின். அவரது ஸ்பின் பவுலிங்கை விளையாட்டு ஆர்வலர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications