Tamilnadu Lockdown: மேலும் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு? ஆலோசனை தொடங்கியது!
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் தொடங்கியது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கேஸ்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12,843 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் சென்னையில் மட்டும் 6,186 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் பாசிட்டிவிட்டி ரேட்டானது 16 முதல் 17 சதவீதமாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 25,978 ஆக உள்ளது.

முதல்வர் தலைமையில் ஆலோசனை
இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி தமிழகத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, தியேட்டர்கள், துணிக் கடைகள், நகைக் கடைகள், வணிக வளாகங்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்
இவை கடந்த 6-ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அரசு அறிவித்தது. அதன்படி நேற்று முன் தினம் இரவு 10 மணிக்கு தொடங்கிய இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்குடன் இன்று அதிகாலை 5 மணியுடன் முடிவடைந்தது. தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா இல்லை கட்டுப்பாடுகளை மேலும் கொண்டு வருவதா என்பது குறித்து இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை தொடங்கியது.

முடிவுகள் என்ன?
இந்த கூட்டத்தில் மருத்துவத் துறை செயலாளர், பொது சுகாதாரத் துறை இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் புதிய கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3 தினங்களே உள்ளதால் அதுகுறித்த கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

என்ன மாதிரியான கட்டுப்பாடுகள்
அத்துடன் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கேஸ்கள் அதிகரிக்கிறதோ அந்த மாவட்டத்திற்கு மட்டும் லாக்டவுன் போடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் பதிவாகும் கொரோனா ஒரு நாள் கேஸ்களில் 50 சதவீதம் கேஸ்கள் சென்னையை சேர்ந்தவையாக இருக்கின்றன. எனவே தலைநகர் சென்னைக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது. கடைகளின் நேரத்தை குறைக்கவும் முடிவு செய்யப்படலாம் என தெரிகிறது. மேலும் தமிழகத்தில் முழு ஊரடங்கு தேவையில்லை என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications