"மூத்தத் திரைக்கலைஞர்" டெல்லி கணேஷ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
சென்னை: நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இரங்கலில் கூறியிருப்பதாவது: மூத்த திரைக்கலைஞர் டெல்லி கணேஷ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். நாடகத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்து தன்னுடைய அடையாளத்தை அழுத்தமாகப் பதித்தவர் டெல்லி கணேஷ் அவர்கள்.

400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவரது நகைச்சுவைக் காட்சிகள் இன்றளவும் மக்களால் மீண்டும் மீண்டும் பார்க்கப்படும் அளவுக்குச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவராக அவர் திகழ்ந்தார்.
வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் டெல்லி கணேஷ் அவர்கள் பல தொடர்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் எழுத்தில் உருவான இளைஞன் திரைப்படத்திலும் டெல்லி கணேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் திரைத்துறை வரலாற்றில் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் பல நகைச்சுவை குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்தவரான அவரது மறைவு திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கம் திரைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் டெல்லி கணேஷ் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு என்ற இடத்தில் ஒரு கிராமத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி 1944 ஆம் ஆண்டு பிறந்தார் கணேஷ். இவர் தட்சிண பாரத நாடக சபா என்கிற தில்லியை சேர்ந்த நாடகக் குழுவில் உறுப்பினராக இருந்ததால் இவர் தில்லி கணேஷ் என அழைக்கப்பட்டு வந்தார்.
விமான படையில் 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்கும் இவருக்கு நடிப்பு மீதான ஆர்வம் குறையாமல் இருந்தது. இந்த நிலையில் 1974 ஆம் ஆண்டு இந்திய விமான படையில் இருந்து வெளியேறினார். பிறகு 1977ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பட்டினப்பிரவேசம் என்ற திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் அறிமுகமானார்.
இதை தொடர்ந்து ஒரு வீடு ஒரு உலகம், பசி, ஆடு பாம்பே, உறங்காத கண்கள், ராஜ பார்வை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications