சோ ராமசாமி வீட்டில் துக்கம்.. மனைவி சவுந்தரா வயது மூப்பால் காலமானார்! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
சென்னை: மறைந்த அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளரும், நடிகருமான சோ ராமசாமியின் மனைவி சவுந்தரா வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, சோ தனது வாழ்நாளில் பத்திரிகை உலகிலும், திரைத்துறை மற்றும் பொது வாழ்விலும் தனி முத்திரை பதித்ததற்கு உற்ற துணையாக இருந்தவர் சவுந்தரா என புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
நாடக ஆசிரியர், நடிகர், அரசியல் விமர்சகர் என்று பல்வேறு முகத்தோடு வலம் வந்தவர் சோ ராமசாமி. இவர் ‛துக்ளக்’ எனும் இதழை தொடங்கி நிறுவன ஆசிரியராகவும் செயல்பட்டு வந்தார். இவர் ராஜ்யசபா எம்பியாகவும் செயல்பட்டுள்ளார்.

சோ ராமசாமி கடந்த 2016ம் ஆண்டில் காலமானார். இதையடுத்து அவரது மனைவி சவுந்தரா சென்னனையில் வசித்து வந்தார். இந்நிலையில் தான் இன்று சவுந்தராவும் காலமானார். அவருக்கு வயது 84. வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் உபாதைகளால் அவரது உயிர் பிரிந்துள்ளது.
சோ ராமசாமி - சவுந்தரா தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் பெயர் ஸ்ரீராம். மகள் பெயர் சிந்துஜா. நாளை மதியம் சவுந்தராவின் உடல் இறுதி சடங்குகளுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது. சோ ராமசாமியின் மனைவி சவுந்தராவின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த சோ ராமசாமியின் மனைவி செளந்தரா காலமானார்! நாளை இறுதிச் சடங்கு.. பிரபலங்கள் இரங்கல்
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ‛‛துக்ளக் நிறுவனரும் - அப்பத்திரிகையின் ஆசிரியராகவம் இருந்து மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமியின் மனைவி சவுந்தரா ராமசாமி மறைந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
சோ தனது வாழ்நாளில் பத்திரிகை உலகிலும், திரைத்துறை மற்றும் பொது வாழ்விலும் தனி முத்திரை பதித்தற்கு உற்ற துணையாக இருந்த சவுந்தரா ராமசாமியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன்’’ எனக்கூறியுள்ளார்.
அதேபோல் பாமக நிறுவன தலைவரான ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‛‛துக்ளக் இதழின் நிறுவனரும், அரசியல் விமர்சகருமான நண்பர் மறைந்த சோ இராமசாமியின் மனைவி சவுந்தரா இராமசாமி காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என கூறியுள்ளார்.
பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ், ‛‛புகழ்பெற்ற அரசியல் விமர்சகரும், எனது மரியாதைக்குரியவருமான மறைந்த சோ இராமசாமியின் மனைவி சவுந்தரா இராமசாமி காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.
-
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
அட.. இதை கவனிச்சீங்களா? தமிழகத்திலேயே 2 குடும்பம் மட்டும்தான்! திமுகவில் களமிறங்கும் தந்தை - மகன்கள் -
ஸ்டாலினின் ரூ. 8000 கூப்பன் Vs எடப்பாடியின் இலவச Fridge திட்டம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
DMK Manifesto: முதியோர் உதவித்தொகை இனி ரூ. 2 ஆயிரமாக உயர்வு.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
’கதாநாயகன்' திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகியது.. ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் என்ன? -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம்












Click it and Unblock the Notifications