மறைந்த சோ ராமசாமியின் மனைவி செளந்தரா காலமானார்! நாளை இறுதிச் சடங்கு.. பிரபலங்கள் இரங்கல்
சென்னை: நடிகர் அரசியல் விமர்சகர் துக்ளக் ஆசிரியர் என பன்முகங்கள் கொண்ட மறைந்த சோ ராமசாமியின் மனைவி செளந்தரா ராமசாமி சென்னையில் தனது 84 ஆவது வயதில் வயது மூப்பு காரணமாக காலமானார்.
தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக அறிமுகமாகி பல்வேறு அரசியல் நையாண்டி வசனங்கள் பேசி பிரபலமானவர் சோ என்ற ராமசாமி.

தொடர்ந்து அரசியல் விமர்சகராக உருவெடுத்ததோடு நாடகத் துறையிலும் மிகப்பெரிய ஜாம்பவானாக வலம் வந்தார். அரசியல்வாதிகளையும் அரசியல் நிகழ்வுகளையும் மிகக் கடுமையாக அதே நேரத்தில் காமெடியாக விமர்சிப்பதன் மூலம் பிரபலமான அவர் துக்ளக் என்ற அரசியல் விமர்சன பத்திரிக்கையும் நடத்தி வந்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலருடன் நெருக்கமாக இருந்த அவர், பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016 ஆம் ஆண்டு சோ ராமசாமி உடல் நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில் அவரது மனைவி செளந்தரா சோ ராமசாமி சென்னையில் தனது மகன் ஸ்ரீ ராம், மகள் சிந்துஜா உடன் வசித்து வந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக ஆகஸ்ட் 19ஆம் தேதி இரவு சௌந்தர ராமசாமி காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதை அடுத்து அவரது உடல் நாளை நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. அவரது மறைவுக்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications