செஸ் தொடரில் புதிய சாதனை படைத்த தமிழ்நாட்டு வீரர் குகேஷ்.. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!
சென்னை: FIDE கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று சாம்பியன் ஆன தமிழ்நாட்டு இளம் வீரர் குகேஷுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கனடாவில் FIDE கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் போட்டிகள் நடைபெற்றது. இதில், இந்தியாவின் 17 வயதான குகேஷ் முதலிடம் பிடித்து, 2024 FIDE கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் சாம்பியனாக வரலாற்று சாதனை படைத்துள்ளார். செஸ் ஜாம்பவானான விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு, கேண்டிடேட்ஸ் போட்டியை வென்ற 2வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் குகேஷ்.

இந்தப் போட்டியின் 14ஆவது சுற்றில் குகேஷ், அமெரிக்காவின் கிஹாரு நகமுராவை எதிர்கொண்டார். இதில், இருவரும் டிரா செய்து தலா அரை புள்ளிகள் பெற்றனர். இந்த சுற்றின் முடிவில் குகேஷ் 9 புள்ளிகள் பெற, நகமுரா 8.5 புள்ளிகள் வென்றார். இதன் மூலமாக முதல் முறையாக கேஷ் கேண்டிடேட்ஸ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக உலக செஸ் சாம்பியன்ஷிப் விளையாடுவதற்கு தகுதியும் பெற்றுள்ளார் குகேஷ். உலக செஸ் சாம்பியன்ஸ் போட்டியில் சீனாவை சேர்ந்த டிங் லிரெனை எதிர்கொள்ள இருக்கிறார் குகேஷ்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக விளையாடுவதற்கு தகுதி பெற்ற முதல் இளம் வீரர் என்ற பெருமை பெற்றுள்ள குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் குகேஷை வாழ்த்தியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். FIDE கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை வெறும் 17 வயதில் படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக, சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
போன முறை.. உலக நாடுகளே வியக்கும் வகையில் உதயநிதி நடத்தினாரே! உலக செஸ் சாம்பியன்ஷிப்.. கைவிட்ட தவெக? -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications