எவரெஸ்ட்டை எட்டிய சாதனை தமிழர் ராஜசேகருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு! இளைஞர்கள் குறித்து பெருமிதம்
சென்னை : எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த கோவளத்தைச் சேர்ந்த இளைஞர் ராஜசேகர் பச்சைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். நம் இளைஞர்கள் முத்திரை பதித்து நம்மையும் தமிழ்நாட்டையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறார்கள் என நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழ்நாட்டின் சென்னையை ஒட்டியுள்ள கோவளம் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞரான ராஜசேகர் பச்சை உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளார்., அலை சறுக்கு போட்டிகளில் சர்வதேச அளவில் பல வெற்றிகளைக் குவித்தவர் ராஜசேகர். பிட்னெஸ், அலை சறுக்கு பயிற்சியாளராக இருந்தவருக்கு திடீரென மலையேற்றத்தில் சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது.

ஒரு வருட காலமாக அதற்கான பயிற்சிகள் எடுத்து, 6 மலை உச்சிகளில் ஏறி தன்னை எவரெஸ்ட் கனவுக்காக தயார்படுத்திக்கொண்டார். 3 மாத உடற்பயிற்சி, பனி குளிரைத் தாங்க மணாலி, சோலங், நேபாள் பகுதிகளில் தங்கி உடலையும், மனதையும் உறுதிப்படுத்திக்கொண்ட குட்டி, ஏப்ரல் 13ஆம் தேதி எவரெஸ்ட் மலையின் அடிவாரத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார்.

8850 மீட்டர் உயரத்தை மே 19ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு அடைந்து தனது கனவை நிஜமாக்கினார் ராஜசேகர். எவரெஸ்ட் சிகரத்தை எட்டி சாதித்துள்ள ராஜசேகர், உலக அரங்கிலும் தமிழ்நாட்டின் பெருமையை நிலைபெறச் செய்துள்ளார். இந்நிலையில், சாதனைத் தமிழர் ராஜசேகருக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பல்வேறு விளையாட்டுகளிலும் நம் இளைஞர்கள் முத்திரை பதித்து நம்மையும் தமிழ்நாட்டையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறார்கள். அந்தவகையில் கோவளத்தைச் சேர்ந்த இராஜசேகர் பச்சை எனும் இளைஞர் உலகின் மிக உயரிய எவரெஸ்ட் சிகரத்தைத் தன் விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் ஏறி அடைந்துள்ளார் என்று அறிந்து மகிழ்ந்தேன். அவருக்கு எனது பாராட்டுகள்." எனத் தெரிவித்துள்ளார்.

-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications