ஸ்டாலினே பேசிட்டாரு.. ஸ்டன் ஆன விஜய்.. தவெக கேம்ப் இதை எதிர்பார்க்கவே இல்லை.. நடந்தது என்ன?
சென்னை: கரூர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேற்று சட்டசபையில் பேசிய விஷயம் தவெக விஜய் தரப்பை ஸ்டன் ஆக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
கரூர் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட பின் தவெக விஜய் கேம்ப் பிரகாசம் ஆனது. முக்கியமாக வழக்கு சிபிஐக்கு போனதால்.. புஸ்ஸி ஆனந்த் 17 நாட்களுக்கு பிறகு நேற்றுதான் பனையூரில் தவெக கட்சி அலுவலகத்துக்கு வந்தார். முகத்தில் தாடி வளர்த்திருந்தார். ஆனால் சிரித்தபடி புகைப்படம் எடுத்தார். அவரை நிர்வாகிகள் அலுவலகத்துக்குள் அழைத்து சென்றனர். நேற்று புஸ்ஸி ஆனந்த் யாருக்கும் அஞ்சலி செலுத்தவில்லை. மரணம் அடைந்தவர்களின் புகைப்படங்களுக்கு மாலை கூட போடவில்லை.

ஆனால் கட்சி நிர்வாகிகளுடன் புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டார். அலுவலகத்துக்குள் புஸ்ஸி ஆனந்த் நுழைந்ததும் கதவு மூடப்பட்டது. அதன்பிறகு அவர் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
ஆதவ் அர்ஜுனா பேட்டி
இன்னொரு பக்கம் ஆதவ் அர்ஜுனா பேட்டி அளித்து இருந்தார். அதில், எங்கள் தரப்பு வைத்த மூன்று கோரிக்கை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. கரூரில் சம்பவம் நடந்த இடத்தில் பிரச்சாரம் செய்ய எங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. காவல் துறை சொன்ன இடத்தில்தான் விஜய் பிரச்சாரம் செய்தார். அது போல் விஜய் தாமதமாக வந்ததால்தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என கூறுவது தவறான தகவல். கரூரில் விஜய் பிரச்சாரம் செய்ய மதியம் 3 மணி முதல் இரவு 10 மணி வரை போலீஸ் அனுமதி கொடுத்திருந்தது. அந்த நேரத்திற்குள் விஜய் பிரச்சாரம் செய்ய வந்தார்.
கரூருக்கு நாங்கள் வந்த போது கரூர் காவல் துறை எங்களை வரவேற்றது. வழக்கத்திற்கு மாறாக வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாதது கரூரில் மட்டும் ஏன் எங்களை காவல் துறை வரவேற்றது? கூட்ட நெரிசல் சம்பவம் ஏற்பட்ட போது காவல் துறை அதிகாரிகள்தான் எங்களை அங்கிருந்து வெளியேறும்படி கூறிவிட்டனர். நாங்கள் அப்படியும் எல்லையில் காத்திருந்தோம்.
ஆனால் காவல் துறையினர்தான் "கலவரம் வரும். நீங்கள் கரூருக்கு வரவேண்டாம்" என்றார்கள். அதனால்தான் நாங்கள் அங்கிருந்து வெளியேறினோமே தவிர நாங்கள் தப்பியோடவில்லை. சம்பவம் நடந்த முதல் இரண்டு, மூன்று நாட்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நாங்களும் மனிதாபிமானமுள்ளவர்கள்தான்., என்றெல்லாம் ஆதவ் அர்ஜுனா அடித்து ஆடிக்கொண்டு இருந்தார்.
முதல்வர் ஸ்டாலின் - தவெக அட்டாக்
கரூர் தொடர்பாக நேற்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசுகையில், கரூர் தவெக பரப்புரை நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை தமிழ்நாடு அரசே காப்பாற்றியது. நான் எனது 50 ஆண்டு காலப் பொது வாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறேன். பார்த்திருக்கிறேன். இங்குள்ள அனைத்து அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் இத்தகைய அனுபவம் கொண்டவர்கள்தான். மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள். போராட்டங்கள் நடத்துபவர்கள் அதற்குரிய சட்ட திட்டங்களுக்கும், நெறிமுறைகளுக்கும், பொது ஒழுக்கங்களுக்கும் கட்டுப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. அப்படித்தான் நடத்த வேண்டும்.
கட்டுப்பாடுகளை மீறும் போது, அதனால் பாதிக்கப்படுவது நிகழ்ச்சி நடத்தும் கட்சியின் தொண்டர்கள்தான். அதனை மனதில் வைத்து பொறுப்போடு செயல்பட வேண்டும். வழக்கமான அரசியல் கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விட கரூர் தவெக பரப்புரையில் கூடுதலாகவே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காவலர்கள், அதிகாரிகள் என அன்று மொத்தம் 606 பேர் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
கரூர் கூட்டம் - தவெக தவறு
கூட்ட ஏற்பாட்டாளர்கள் சில முக்கிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அவை கரூரில் செய்யப்படவில்லை. காத்திருந்த மக்களுக்கு போதிய குடிநீர் இல்லை. உணவு வழங்க எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. இயற்கை உபாதைகளை கழிக்க பெண்களால் வெளியில் செல்ல முடியவில்லை. அதே இடத்தில் 2 தினங்களுக்கு முன்பு அதிமுக நடத்திய கூட்டத்தில் பங்கேற்றவர்கள் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தனர். கட்டுப்பாட்டோடு நடந்துக் கொண்டனர்.
கரூரில் தொண்டர்கள் - கட்சியினர் இடையே கட்டுப்பாடு இல்லாததே காரணம். கரூர் துயர சம்பவம் நடந்த அதே இடத்தில் 2 நாட்களுக்கு முன் அதிமுகவின் கூட்டம் நட்டதுள்ளது. அங்கு கூடியவர்கள் மிகவும்கட்டுப்பாட்டுடன் கூடி கலைந்தனர். இதற்கு நேர்மாறாக தவெக கூட்டத்தில் நடந்துள்ளது
கரூரில் செப்.27 ஆம் தேதி தவெக தலைவரின் அரசியல் நிகழ்ச்சி நடைபெற்றது. அக்கட்சியின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் இதற்கான அனுமதி கோரிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் இருப்பதாலும், பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படும் என்பதாலும், பாதுகாப்புக் காரணங்களாலும் அனுமதி வழங்கவில்லை . லைட் ஹவுஸ் கார்னர் / உழவர் சந்தை பகுதியில் கூட்டம் நடத்த அனுமதி கோரிய மனுவுக்கும், கூட்ட அளவு மதிப்பீடு மற்றும் பாதுகாப்புக் காரணங்களால் அனுமதி வழங்க இயலவில்லை.
கரூர் பரப்புரைக்கு தவெக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட 12 மணியைக் கடந்து 7 மணிநேரம் தாமதமாக தவெக தலைவர் வந்துள்ளார். இதுதான் நெரிசலுக்கு காரணம் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் எதிர்பார்க்கவே இல்லை
கரூர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேற்று சட்டசபையில் பேசிய விஷயம் தவெக விஜய் தரப்பை ஸ்டன் ஆக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்டாலின் இந்த விவகாரத்தில் அமைதி காத்தபடியே இருந்தார். முதல்முறை வீடியோ வெளியிட்ட போது கூட அவர் பெரிதாக எதுவும் விஜய் மீது புகார் வைக்கவில்லை. அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றே ஸ்டாலின் பேசினார். ஆனால் கோர்ட் உத்தரவிற்கு பின்பும் தவெக சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசியதை அடுத்து ஸ்டாலின் சட்டசபையிலேயே நேரடியாக அட்டாக் மோடில் இறங்கி உள்ளார்.
ஸ்டாலின் நாகரீகமாக செல்வதை பயன்படுத்த தவெக இறங்கி அடித்துக்கொண்டு இருந்த நிலையில் தற்போது ஸ்டாலினும் நேரடியாக சட்டசபையிலேயே இறங்கி பேச தொடங்கி உள்ளது விஜய் தரப்பு எதிர்பார்க்காத திருப்பமாக பார்க்கப்படுகிறது.
-
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம் -
அனைத்து டெண்டர்களும் நிறுத்தம்.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட அறநிலையத்துறை முடிவு! -
மின் வெட்டை தடுக்க களமிறங்கும் 10 சிறப்பு குழுக்கள்.. பறக்கும் 125 மின் தடை நீக்க ரோந்து வாகனங்கள்! -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
ஜான் ஆரோக்கியசாமியின் டெல்லி லாபி.. திமுகவுக்கு தூதுவிட்ட சுனில்.. சபரீசனுக்கு வந்துச்சே கோபம் -
விஜய் அரசை தாண்டி.. பரந்தூர் விமான நிலையத்துக்கு புதிய சிக்கல்.. ஆந்திரா மூலம் வந்த புது பிரச்சனை! -
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
முதல்வர் விஜய்யை சுற்றி தலைமை செயலகத்தில் 4 பவர் சென்டர்கள்.. முன்னாள் அமைச்சர் உதயக்குமார் புகார் -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா











Click it and Unblock the Notifications