யு.எஸ் பறந்த உளவுத்துறை ரிப்போர்ட்.. அவர் எப்படி இருக்காரு? பார்த்ததும் ஸ்டாலின் கேட்ட கேள்வி!
சென்னை: அமெரிக்கா சென்றாலும் உங்கள் ஒவ்வொருவரையும் நான் கண்காணித்துக் கொண்டுதான் இருப்பேன். என் முழு கவனமும் தமிழகத்தில்தான் இருக்கும். அதேபோல, உங்கள் ஒவ்வொருவரையும் மத்திய அரசு கண்காணித்தபடி இருக்கிறது. எச்சரிக்கையாக இருங்கள்; கவனமாக இருங்கள் என்றெல்லாம் அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களை எச்சரித்தார் ஸ்டாலின்.
இதுகுறித்து மாநில உளவுத்துறைக்கும் அறிவுறுத்தியிருந்தார். அந்த வகையில், தமிழகத்தில் நடக்கும் அத்தனை விசயங்களையும் ஒவ்வொரு நாளும் அமெரிக்காவில் உள்ள முதல்வருக்கு அனுப்பி வைக்கிறது உளவுத்துறை. உயரதிகாரிகளிடம் நேற்று பேசிய முதல்வர் தரப்பு, அமைச்சர்கள் ஒவ்வொருவரும் எங்கு இருக்கிறார்கள் ? என்ன செய்கிறார்கள் ? என விசாரித்துள்ளது.

ஸ்பெஷல் கேள்வி: அமைச்சர்களின் தினசரி செயல்பாடுகளின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகனை பற்றி ஸ்பெஷலாக கேட்டிருக்கிறது மேலிடம். அப்போது, முதல்வரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்த கையோடு காட்பாடி சென்றவர் அங்குதான் இருக்கிறார். இப்போது வரை சென்னைக்கு வரவில்லை. அனேகமாக சனிக்கிழமைதான் சென்னைக்கு வருவார் என விவரங்களைத் தந்துள்ளனர்.
அதேபோல, சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் அவரை கைது செய்வதா? தவிர்ப்பதா? என்று முதல்வர் தரப்பிடம் கேட்டிருக்கிறார்கள் அதிகாரிகள். கேபினெட் கூட்டத்தில் எச்சரிக்கை செய்தது போல, அமைச்சர்களின் அன்றாட செயல்பாடுகளை கவனித்து வருகிறார் ஸ்டாலின் என்பதே திமுகவில் பேசப்படும் சீக்ரெட் டாபிக்.
யார் அதிகாரம்: முதல்வர் ஸ்டாலின் கிட்டத்தட்ட இரண்டரை வாரங்கள் அமெரிக்காவில் இருப்பார். பல்வேறு முதலீடுகளை தமிழ்நாட்டை நோக்கி கொண்டு வருவதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி நிர்வாகத்தை கவனிக்க போவது யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
அமைச்சரவை மாற்றம் இல்லை: சமீபத்தில் தமிழ்நாட்டின் தலைமை செயலாளராக என்.முருகானந்தம் தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாடு தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய தலைமை செயலாளராக என்.முருகானந்தம் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
தமிழ்நாட்டில் அதிகாரிகள் மாற்றம் சில நாட்களுக்கு இனி இருக்காது.. என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அடுத்ததாக.. தமிழ்நாட்டில் பெரும்பாலும் ஒரு வாரத்தில் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்கிறார்கள். இதற்கான லிஸ்ட் ரெடியாகிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன.
வரும் நாட்களில் தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக பல திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ஆளும் திமுகவில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் முன் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த மாற்றம்தான் செய்யப்படவில்லை.

ஆட்சி அதிகாரம்: இதனால் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ள நிலையில்.. இங்கே ஆட்சி அதிகாரத்தை கவனிக்க போவது யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் கிடையாது.
ஆனாலும் பெரும்பாலும் நிர்வாகத்தை அவரே பொறுப்பெடுத்து கவனித்துக்கொள்வார் என்று கூறப்படுகிறது. தலைமை செயலாளர் முருகானந்தம் தினசரி பணிகளை கவனிப்பார் . நிர்வாக பணிகளை மேற்பார்வையிடுவார். அதே சமயம் ஆட்சி, கட்சி ரீதியிலான பணிகளை உதயநிதி ஸ்டாலின் கவனிப்பார்.. இந்த பணிகள் அனைத்தையும் ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் கவனித்துக்கொள்வார் என்று கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications