ஸ்டாலின் டேபிளுக்கு போன ரிப்போர்ட்.. விஜய்க்கு பெரிய சிக்கல்! தனித்து விடப்பட்டுட்டாரே!கவனிச்சீங்களா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கிட்டத்தட்ட இப்போது சொந்த கட்சியினரால் தனித்து விடப்பட்டு உள்ளார். இந்த நிலையில்தான் விஜய்க்கு எதிராக முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியமான ரிப்போர்ட் ஒன்று சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

1. முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் தொடர்பாக சென்றுள்ள ரிப்போர்ட்டில்.. இந்த கரூர் விவகாரம் விஜய்க்கு எதிராக திரும்பி உள்ளது. மக்கள் கொதிப்பில் உள்ளார்கள். முக்கியமாக சீனியர்கள், பெண்கள் மக்களுக்கு எதிராக உள்ளனர். சில இளைஞர்கள் மட்டுமே விஜய்க்கு ஆதரவாக உள்ளனர்.

TVK Vijay

2. விஜய்க்கு ஆதரவாக இருக்கும் சிலரும் கூட.. இணையம் வழியாகவே அந்த பிம்பத்தில் உள்ளனர். சில டிரெண்ட் காரணமாக விஜய்க்கு ஆதரவாக சில இளைஞர்கள் செயல்படுகிறார்கள். அதை தவிர பெரும்பாலனோர் விஜய்க்கு ஆதரவாக இல்லை.

3. விஜய் தாமதமாக வந்தார். கூட்டத்தை கட்டுப்படுத்த தலைவராக எதுவும் செய்யவில்லை. விஜய் பொறுப்பு ஏற்கவில்லை. முக்கியமாக மக்கள் பலியான பின் விஜய் மன்னிப்பு கூட கேட்கவில்லை. விஜய் நேரடியாக வீட்டிற்கு சென்றார்.

4. அவர் கரூர் போக கூடாது என்று போலீஸ் சொல்லி இருந்தது என்று வைத்துக்கொண்டால் கூட.. அவர் திருச்சியில் தங்கி இருக்கலாம். ஆனால் அதை செய்யாமல் அவசர அவசரமாக விஜய் வீட்டிற்கு சென்றது தவறு. இதை ஏற்க முடியாது என்ற மனநிலையில் மக்கள் இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் மேஜைக்கு சென்ற அந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டு உள்ளதாம்.

5. இந்த நிலையில் தவெகவின் தவறுகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் ப்ரீ ஹேண்ட் கொடுத்துள்ளாராம். அமைச்சர்கள், எம்பிக்கள் இறங்கி பேசுங்கள்.. உண்மையை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்று கூறி உள்ளாராம்.

6. . இந்த நிலையில் தான் திமுக எம்பி ஆ ராசா, நம்மால் தான் இது நடந்துள்ளது என்று அவர்கள் மனதிற்கு தெரிந்துள்ளது என்ற குற்ற உணர்ச்சியால் தால் கரூருக்கு வரவில்லை என்று கூறியுள்ளார். திமுக எம்பி ஆ ராசா இன்று சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-திமுகவில் முன்பு ஒரு பேரணியில் கலவரம் ஏற்பட்டது. ஆனால் அப்போது எதையும் பொருட்படுத்தாமல் கலைஞர் கருணாநிதி சம்பவ இடத்துக்கு சென்றார். இதேபோல் கொரோனா காலத்திலும் மக்களுக்காக ஒன்றிணைவோம் என்ற பெயரில் ஒரு முழக்கத்தை எழுப்பி, பொதுமக்களுக்கு எல்லாவற்றையும் வழங்கியவர் முதல்வர் ஸ்டாலின் என்று விமர்சனம் செய்து பேசி உள்ளார்.

7. மேலும் கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, "லைட் ஹவுஸ் கார்னர், உழவர் சந்தை பகுதியில் அதிகபட்சமாக 2000 முதல் 5000 நபர்கள் மட்டுமே நிறுத்த முடியும். பொதுவாக கூட்டம் நடத்தும் போது அரசியல் கட்சித் தலைவர்கள் பிரச்சார வாகனத்தின் முன் சீட்டில் அமர்ந்திருப்பார்கள்.

கூட்டம் அதிகமாக இருந்தால் வாகனத்தின் மேலே ஏறி நின்று கையசைப்பார்கள். கூட்டம் நடைபெறும் இடத்திற்கு 500 மீட்டர் முன்பாக வாகனத்தின் உள்பகுதிக்குள் சென்றுவிட்டார். அந்த வாகனம் செல்வதற்கு ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. காவல்துறையினர் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. எனவே இந்தப் பகுதியிலேயே நின்று பேசி விடலாம் என அறிவுறுத்தி உள்ளனர். அப்பொழுதும் அவர்கள் கேட்கவில்லை. நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் வாகனத்தை நிறுத்துவோம் எனவும் வரும் வழியிலேயே தொண்டர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு வந்திருந்தால் கூட்ட நெரிசல் அதிகமாகி இருந்திருக்காது. அவரைப் பார்ப்பதற்காகச் சென்ற பொழுதுதான் கூட்ட நெரிசல் அதிகமாகிவிட்டது. அந்த 500 மீட்டர் தூரத்தில் அவர் மேலே ஏறி கையசைத்திருந்தாலோ அல்லது வாகனத்திற்குள் அமர்ந்து கையசைத்திருந்தாலோ இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்காது, என்று குறிப்பிட்டு இருந்தார்.

8. இப்படி திமுக எம்பிக்கள், அமைச்சர்கள், மாஜி அமைச்சர்கள் விஜயை இறங்கி அடிக்க தொடங்கி உள்ளனர். ஆனால் விஜய் தரப்பிலோ.. புஸ்ஸி ஆனந்த், அருண், ஜான், ராஜ்மோகன் எல்லோரும் தலைமறைவாகி உள்ளனர். ஆதவ் அர்ஜுனாவும் டெல்லி சென்றுவிட்டதால் விஜய் கிட்டத்தட்ட தனித்துவிடப்பட்டு உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+