எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயரில் புதிய சாலை.. ஒரே நாளில் அதிரடி முடிவெடுத்த ஸ்டாலின்
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில்தான் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்ந்து வந்த காம்தார் நகர் பகுதிக்கு 'எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்' என பெயர் மாற்றம் செய்யக் கோரி அவரது மகனும் பாடகருமான எஸ்பி சரண் முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அந்த சாலைக்கு "எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை" எனப் பெயரிடப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் எஸ்பி பாலசுப்பிரமணியம். நடிகர், இசையமைப்பாளர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பன்முக கலைஞராகத் திகழ்ந்தவர். பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

6 தேசிய விருது, நூற்றுக்கணக்கான பல மாநில விருதுகளைப் பெற்றுள்ளார். பன்முகக் கலைஞராக மட்டுமல்லாமல் அனைவரிடமும் அன்புடன் பழகக்கூடிய பண்புடையவராகவும் திகழ்ந்தவாராவர். கடந்த 2020 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் மருத்துவமனையிலேயே எஸ்பிபி உயிரிழந்தார். இன்று எஸ்பிபியின் நான்காம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
எஸ்பிபியின் ரசிகர்கள் அவரது நினைவு நாளையொட்டி அவரது உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காம்தார் நகர் பகுதியில் எஸ்பி பாலசுப்ரமணியம் வாழ்ந்து வந்தார். எனவே, இந்த காம்தார் நகர் பகுதியை 'எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்' என பெயர் மாற்றம் செய்யக் கோரி அவரது மகனும் பாடகருமான எஸ்பி சரண், முதலமைச்சர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், "நீண்ட நெடும் காலமாக சினிமா துறையில் தனது இசையின் மூலமாக தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்து அவர்களின் மாறா அன்பை பெற்றவர் மறைந்த எஸ்பி பாலசுப்ரமணியம். அவரது நினைவை போற்றும் வகையில், எஸ்பிபி இறுதி மூச்சு வரையில், நீண்ட காலம் வாழ்ந்த சென்னையில் உள்ள காம்தார் நகரினை அல்லது அவர் வாழ்ந்த வீதியை எஸ்பி பாலசுப்ரமணியம் நகர் அல்லது வீதி என பெயர் மாற்றம் செய்திட உரிய ஆவணம் செய்யுமாறு, அவருடைய ரசிகள் என்ற முறையிலும், மகன் என்ற முறையிலும், என் சார்பிலும் எனது குடும்பத்தினர் சார்பிலும் மிகவும் பணிவுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
அவரது கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆவலும், வேண்டுதலும் இதுவே என்பதையும் உங்கள் கனிவான பார்வைக்கு கொண்டுவர கடமைப்பட்டிருக்கிறேன்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில், எஸ்பி சரணின் இந்த கோரிக்கையை முதல்வர் ஏற்றுக் கொண்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் தனது எக்ஸ் தள பக்கத்தில் எஸ்.பி.பி. வாழ்ந்த காம்தார் நகருக்கு "எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை" என்ற பெயர் வைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
அந்தப் பதிவில், பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களது நினைவு நாளில், அவர் வாழ்ந்த காம்தார் நகர் பிரதான சாலைக்கு "எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை" எனப் பெயரிடப்படும் எனும் அறிவிப்பைச் செய்வதில் பாலு அவர்களின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications