நான் ஓடி ஒளிபவன் அல்ல.. சபையில் இருந்து வெளியேறியோர் இதை பாருங்க! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ
சென்னை: "முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொன்னவர்களுக்கு... எங்கும் ஓடி ஒளியாமல் பேசியுள்ளேன். அவையில் இருந்து கேட்க மனமில்லாமல் அரசியல் ஆதாயங்களுக்காக வெளியேறியவர்கள் இந்தக் காணொளியைக் காணட்டும்..." எனக் கூறி தான் சட்டசபையில் பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழக சட்டப்பேரவை இரண்டாவது நாளாக இன்று கூடியது. அப்போது அதிமுக, பாமக எம்எல்ஏக்கள் கருப்பு நிற உடையணிந்து வந்திருந்தனர். கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சியில் 50 பேர் பலியான சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். சட்டசபை தொடங்கியதும் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏக்கள் கோரினர்.

அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் அதிமுக உறுப்பினர்கள், முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று கூறி பதாகைகளை ஏந்தி சபாநாயகர் இருக்கை முன்பு கோஷமிட்டனர். இதையடுத்து சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர் பி உதயகுமார் உள்பட அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். பாஜக, பாமக எம்எல்ஏக்களும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதைத்தொடர்ந்து சட்டசபையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான அவசர மருத்துவ உதவிகளை செய்ய வலியுறுத்தி உள்ளதாகவும், கூடுதலாக 57 அரசு மருத்துவர்களை கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் சிகிச்சைக்கு தேவைப்படும் உயிர்காக்கும் மருந்துகளும் கையிருப்பில் உள்ளன என்று அவர் கூறினார். பாதிக்கப்பட்ட 164 நோயாளிகளில் 117 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் 47 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக கோவிந்தராஜ் என்ற கண்ணுக்குட்டி என்பவரை கைது செய்து, 200 லிட்டர் மெத்தனால் சாராயம் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிவுற்றதும் கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றிப் பேசப்படும் என்பதை அறிந்தே, வெளிநடப்பு எனும் மலிவான அரசியலை எதிர்க்கட்சியினர் செய்துள்ளனர்.
— M.K.Stalin (@mkstalin) June 21, 2024
முதலமைச்சர் இராஜிநாமா செய்ய வேண்டும் என்று சொன்னவர்களுக்கு…
எங்கும் ஓடி ஒளியாமல் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட… pic.twitter.com/Ubgd3RU1jj
மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்கவும், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவும் சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன் என்றும் உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் 2 நாளில் விசாரணை அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளேன் என்றும் முதல்வர் தெரிவித்தார். அறிக்கை கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். மெத்தனால் தயாரிப்பு மற்றும் பயன்படுத்தும் ஆலைகளை தணிக்கை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் கள்ளச்சாராயத்தால் பெற்றோரை இழந்தோருக்கு உயர்கல்வி வரை படிப்பு செலவை அரசே ஏற்கும் என்றும் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியடையும் வரை பராமரிப்புத் தொகையாக மாதம் ரூ.5000 வழங்கப்படும், 5 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு 3 லட்சம் வைப்பு நிதியாக வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
உள்துறையை கவனிப்பவன் என்ற முறையில் மட்டுமல்ல, தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில் இந்த பிரச்ழ்னையில் இருந்து ஓடி ஒளிபவன் அல்ல, பொறுப்புடன் பதிலளிப்பவன் என்று முதல்வர் கூறினார். அதனால் தான் எடுத்த நடவடிக்கையை பட்டியலிட்டு, குற்றவாளிகளை கைது செய்த பிறகே பதிலளிக்கிறேன் என்று அவர் தெரிவித்தார். சமூக விரோதிகளிடம் இருந்து மக்களை காக்க எந்தவிதமான கடுமையான நடவடிக்கையும் எடுப்பேன் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.
தான் இன்று சட்டசபையில் பேசிய காணொளியை எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிவுற்றதும் கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றிப் பேசப்படும் என்பதை அறிந்தே, வெளிநடப்பு எனும் மலிவான அரசியலை எதிர்க்கட்சியினர் செய்துள்ளனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் இராஜினாமா செய்ய வேண்டும் என்று சொன்னவர்களுக்கு எங்கும் ஓடி ஒளியாமல் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளேன். அவையில் இருந்து கேட்க மனமில்லாமல் அரசியல் ஆதாயங்களுக்காக வெளியேறியவர்கள் இந்தக் காணொளியைக் காணட்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
6ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை! இந்தி திணிப்பை கண்டித்து சிபிஎஸ்இக்கு ஸ்டாலின் கண்டனம் -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
கடைசிக் காலத்தில் கலைஞர் சிறைப்படுத்தப்பட்டிருந்தாரா? உண்மைக்கு மாறானது.. வைரமுத்து -
புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை! -
கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்தேனா? நாக்கில் நரம்பிருக்கா பழனிசாமி? ஸ்டாலின் ஆவேசம் -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக்












Click it and Unblock the Notifications