20 வருடப் போராட்டம்.. இருளர்கள் விடுதலை.. ரூ 2.5 கோடியில் ஸ்டாலின் தந்த 2 விடுதிகள்..
சென்னை: 'கல்வியும் சுகாதாரமும் இந்த அரசின் இரு கண்கள் என அடிக்கடிப் பேசி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அது வெறும் பேச்சு அல்ல. அவரது லட்சியம்.
அதை உண்மை என நிரூபித்துள்ளது கோவை மாவட்டத்தில் மானார் மலைக்கிராமத்தில் செயல்பட்டுவரும் பழங்குடிப் பள்ளி.

கடந்த 20 வருடங்களாக முறையான வசதி இல்லாமல், பாழடைந்த கட்டடத்தில் இப்பள்ளி செயல்பட்டு வந்தது. ஆகவே, அதில் சேர்த்து தங்களின் பிள்ளைகளைப் படிக்கவைக்க மக்கள் பயந்து வந்தனர்.
எவ்வளவோ முறை மனு மேல் மனு போட்டு கோரிக்கை வைத்தும் புதிய கட்டடம் என்பது இந்த மக்களைப் பொறுத்தவரை எட்டாத கனவாக இருந்து வந்தது.

இந்த திராவிட மாடல் ஆட்சியில் கோரிக்கை வைத்த வேகத்திலேயே, 2.5 கோடி ரூபாய் செலவில் ஆண், பெண் என்று இரு பாலருக்கும் தனித்தனியே மிகச் சிறப்பான விடுதிகளைக் கட்டித் தந்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
கறைபடிந்துபோய் கிடந்த கட்டங்கள் தரைமட்டமாக்கப்பட்டு புத்தம் புது பொலிவுடன் விடுதிகள் கலர் ஃபுல்லாக காட்சி தருகின்றன. இதனால் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து பழங்குடி மக்களும் பூரித்துப் போய் உள்ளனர்.

இந்த மாற்றங்கள் குறித்துப் பேசிய ஆசிரியர் அலெக்சாண்டர், "மோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுக்காவில் உள்ள மானார் பகுதி. காரமடை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி. இது கோவையிலிருந்து கிட்டத்தட்ட 50கிமீட்டர் தொலைவில் உள்ளது. இது ஒரு மலைக்கிராமம். இந்த மலையில் 33 கிராமங்கள் இருக்கின்றன.
அதில் 22 கிராமங்களுக்கு இந்த அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி. தான் ஆதாரம். இந்த 22 கிராமங்களும் இந்தப் பள்ளியைச் சுற்றி 3 அல்லது 3 கிமீட்டர் தொலைவில்தான் உள்ளன. அதில் அதிகமாக இருளர் இன மக்கள்தான் அதிகம் வாழ்ந்துவருகிறார்கள்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளிக்கு வரும் குழந்தைகளின் வருகை மிகக் குறைவாகத்தான் இருந்தது. இப்போது திமுக அரசு அமைந்த பிறகு இரண்டு விடுதிகளைக் கட்டி உள்ளனர். ஒன்று ஆண்கள் விடுதி. மற்றொன்று பெண்கள் விடுதி.
இந்த விடுதி வந்ததால், பல பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை இந்தப் பள்ளியில் சேர்ப்பதற்கு அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். ஏனென்றால், இது உண்டு உறைவிடப் பள்ளி. அதனால் குழந்தைகளுக்கு அலைச்சல் இருக்காது. பாதுகாப்பாகவும் படிக்கலாம். நல்ல உணவும் படிப்பும் சேர்த்து ஒரே இடத்தில் கிடைப்பதால், தேடி வந்து சேர்க்கிறார்கள்" என்கிறார்

தொடர்ந்து பேசிய இவர், "காலை உணவு இங்கேயே கிடைக்கிறது. மதிய உணவும் கிடைத்துவிடுகிறது. இரவு தங்குவதற்கும் பாதுகாப்பான விடுதி இருக்கிறது. இந்த அனைத்து வசதிகளும் பெற்றோரை இந்தப் பள்ளியை நோக்கி நகர்த்தி இருக்கிறது" என்கிறார்
இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை பிரேமா, "பொதுவாக மலைவாழ் மக்களுக்குக் கல்வி தொடர்பான விழிப்புணர்வு குறைவு. அவர்களுக்கு வெளியுலகத்தோடு உள்ள புழக்கம் குறைவு. இந்த மலையிலேயே பயிர்செய்து கொண்டு, ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு அப்படியே வாழ்ந்துவருகிறார்கள்.

ஆகவே, மற்ற மக்களைவிடக் கல்வியின் முக்கியத்துவத்தை அவர்களுக்குப் புரியவைக்க அதிகம் மெனக்கெட வேண்டியுள்ளது.
இப்போது அரசு கட்டித்தந்துள்ள விடுதி மிக வசதியாக இருக்கிறது. வசதி என்று சொல்வதைவிட நவீன வசதியாக இருக்கிறது என்று சொல்வது முக்கியம். நவீனக் கழிப்பறை, ரீடிங் ரூம், சாப்பாட்டு அறை என அனைத்து மாடர்ன் ஆக கட்டித்தந்துள்ளனர்.

ஒருநகர பள்ளி எந்தளவுக்கு வசதிகளைக் கொண்டிருக்குமோ அதற்கு இணையான வசதி எங்கள் இருளர் பள்ளியிலும் செய்துதரப்பட்டுள்ளது"என்கிறார்
சமூக ஆர்வலர் வீரப்பன், "முன்பு இருந்த விடுதி பாழடைந்த நிலையிலிருந்தது. பலகாலமாக அதை யாரும் சீரமைக்கவே இல்லை. கட்டடத்தின் ஆயுள் காலம் முடிந்த பிறகும் பிள்ளைகள் அங்கேதான் தங்கி இருந்தனர். நினைக்கவே வேதனையான விஷயம்.

ஆனால், இந்த ஆட்சியில் குறையை முன்வைத்த உடனேயே தீர்வை ஏற்படுத்தித் தந்துள்ளனர். மிக நவீனமான கட்டடம் கட்டித்தரப்பட்டுள்ளது. வேலைகள் சில நாட்களில் முடிவடைய உள்ளன. புதிய வகுப்பறைக் கட்டடத்தில் பிள்ளைகள் உட்கார்ந்து படிப்பதைச் சந்தோஷமாக விரும்பு செய்கின்றனர்.
இந்தக் கட்டடம் இன்னும் 20வருடங்கள் வரை தாங்கும். அதுவரை பல தலைமுறை குழந்தைகள் தங்கிப் படித்து, எதிர்காலத்தில் நல்ல நிலையை அடைந்துவிடுவார்கள்.

தமிழ்நாடு முழுக்க 37 வகையான பழங்குடிகள் இருக்கின்றார்கள். பழங்குடிகள் கல்வி கற்ற வருகிறார்கள், ஆனால் அதிகப்படியானவர்கள் இடையிலேயே நின்றுவிடுகிறார்கள். தொடர்ந்து படிப்பதில்லை. புள்ளிவிவரம் அப்படித்தான் சொல்கிறது.
அதை மனதில் கொண்டுதான் இந்தப் புதிய ஆட்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பழங்குடி இன மக்கள் கல்விக்காக அதிகப்படியான நிதியை ஒதுக்கியுள்ளார். இது நல்ல முயற்சி" என்கிறார்

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, "காரமடை மற்றும் மானார் ஆகிய இரண்டு பகுதிகளிலும் பழங்குடியின மக்கள் அதிகமாக வாழ்ந்துவருகின்றனர். இந்த மாதிரியான மக்கள் மலைக்கிராமத்தில் வசித்து வருவதால் போக்குவரத்து வசதிகள் முறையாக இருக்காது.
ஆகவே அவர்களின் குழந்தைகளை முறையாகப் பள்ளிக்கு அனுப்பிப் படிக்கவைப்பதில் பல்வேறு சிரமங்கள் இருக்கின்றன. அதை உணர்ந்து இந்த அரசு அவர்களின் நலனில் அக்கறை வைத்து உண்டு உறைவிட பள்ளி முறையை ஊக்குவித்து வருகிறது. அவர்கள் வெளியில் எங்கும் அலையாமல், ஒரே இடத்தில் தங்கி கல்வி கற்க முடியும். அதை அந்த மக்களும் அதிகம் விரும்புகின்றனர்.

இதற்காக காரமடை பகுதியில் உள்ள பள்ளியில் 2.5 கோடி ரூபாய் செலவில் ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலருக்கும் தனித்தனியே விடுதிகளைக் கட்டித் தந்துள்ளோம். அதைப்போலவே மற்றொரு இடத்தில் 1 கோடி செலவில் ஒரு விடுதியைக் கட்டித் தந்துள்ளோம்.

அரசின் முக்கிய நோக்கம் என்னவென்றால் கோவை என்பது தொழில் சாலைகள் நிறைந்த நகரம். ஆகவே தொழிற்கல்வியை இந்தப் பழங்குடி மாணவர்களுக்குக் கற்றுத்தந்து அவர்களைக் கோவையைச் சுற்றி உள்ள தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்த வேண்டும். அதன்மூலம் வரும் தலைமுறை நல்ல வாய்ப்புகளைப் பெற வேண்டும்

ஆனைகட்டியில் பழங்குடி மாணவர்களுக்காக ஐஐடி ஒன்று செயல்பட்டு வருகிறது. வருடத்திற்கு 120 மாணவர்கள் அதில் படித்துவிட்டு வெளியேறுகிறார்கள். அவர்களுக்குத் தொழில் செய்யக் கடன் உதவி வங்கியிலிருந்து பெற்றுத் தந்து, அவர்களைத் தொழில்முனைவோராக மாற்றுவதற்கான காரணம் என்கிறார்
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications