மாற்றுத்திறனாளிகளுக்கும் விடியல் பயணம்! ஸ்டாலின் வெளியிட்ட 9 முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
சென்னை: 79ஆவது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதல்வர் ஸ்டாலின், 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
79-ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். அது போல் தமிழகத்தில் சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றினார்.

பிறகு முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் விடுதலை போராட்ட வீரர்களுக்கும் அவர்தம் குடும்பங்களுக்கு திமுக அரசு என்னென்ன நலத்திட்டங்களை செய்துள்ளது என்பதை அவர் பட்டியலிட்டார்.
அப்போது அவர் 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவை என்ன என்பதை பார்க்கலாம்.
விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ 22 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும். தியாகிகளின் குடும்பங்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ 12 ஆயிரமாக உயர்த்தப்படும். 2ஆவது உலகப் போரில் பங்கேற்ற தமிழக வீரர்களுக்கான மாதாந்திர நிதியுதவி ரூ 15 ஆயிரமாக உயர்த்தப்படும். 2ஆவது உலக போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதியுதவி ரூ 8 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.
ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் ஒரு பயிற்சி மையம், மண்டல அளவில் இரண்டு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும். மலை பகுதிகளில் கட்டணமில்லா பேருந்து பயணம் மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும். கட்டபொம்மன், வஉசி உள்ளிட்ட தியாகிகளின் வழித்தோன்றதல்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ 11 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.
முன்னாள் படைவீரர்கள் வசதிக்காக சென்னை மாதவரத்தில் தங்கும் விடுதி அமைக்கப்படும். முன்னாள் படைவீரர்கள் தங்கம் விடுதி 33 ஆயிரம் சதுர அடி பரப்பில் ரூ 22 கோடியில் அமைக்கப்படும். இவ்வாறு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications