சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனி "இது" கட்டாயம்! சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்! அடிதூள்! அமைச்சர்கள் எல்லோருக்கும் போன திடீர் மெசேஜ்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்கள் எல்லோருக்கும் முக்கியமான மெசேஜ் ஒன்று முதல்வர் ஸ்டாலின் தரப்பிடம் இருந்துள்ளதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் தமிழ்நாடு அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. ஒன்றரை வருட ஆட்சிக்கு பின் இந்த மாற்றங்கள் அமைச்சரவையில் செய்யப்பட்டன.

முதல்வர் ஸ்டாலினின் ஒரு இலாக்காவையும் சேர்த்து மொத்தமாக 11 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டு உள்ளன. உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டுத்துறை வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல் சிறப்பு திட்ட செயலாக்கம் துறை வழங்கப்பட்டு உள்ளது.

ஒண்ணு சொல்லுவேன்.. டி.ஆர்.பாலு கோபப்படக்கூடாது.. “இன்றைக்கும் கடன் காரர்”.. போட்டு உடைத்த ஸ்டாலின்!ஒண்ணு சொல்லுவேன்.. டி.ஆர்.பாலு கோபப்படக்கூடாது.. “இன்றைக்கும் கடன் காரர்”.. போட்டு உடைத்த ஸ்டாலின்!

மாற்றம் எப்படி

மாற்றம் எப்படி

தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் 39வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் 14ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆனது மட்டுமின்றி மட்டுமின்றி பல சீனியர் அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட்டு உள்ளன. ஐ பெரியசாமி, ராஜகண்ணப்பன், முத்துசாமி, பெரியகருப்பன், சேகர் பாபு, ராமசந்திரன், காந்தி, பிடிஆர், மெய்யநாதன், மதிவேந்தன் ஆகியோரின் இலாக்காக்கள் மாற்றப்பட்டு உள்ளன. கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு வனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மெய்யநாதனுக்கு சுற்றுசூழல் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சிறப்பு அமலாக்கத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

காரணம்

காரணம்

இந்த அமைச்சரவை மாற்றம் முழுக்க முழுக்க ரிப்போர்ட் அடிப்படையில் செய்யப்பட்டு உள்ளது. அதாவது அமைச்சரவையை மாற்ற இரண்டு விதமான ரிப்போர்ட்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஒரு ரிப்போர்ட் அமைச்சர்கள் தங்கள் துறையை பற்றி கொடுக்கும் ரிப்போர்ட். தங்களுக்கு கீழ் உள்ள இலாக்காக்களில் அமைச்சர்கள் எடுக்கும் முடிவுகள், செயல்பாடுகள் பற்றி அமைச்சர்களே கொடுக்கும் ரிப்போர்ட். இதை அவ்வப்போது அமைச்சர்கள் கொடுப்பார்கள். இரண்டாவது ரிப்போர்ட் அமைச்சர்கள் பற்றி உளவுத்துறை கொடுக்கும் மாதாந்திர ரிப்போர்ட். அமைச்சர்களின் செயல்பாடு பற்றி உளவுத்துறை கொடுக்கும் மார்க். இதை எல்லாம் அடிப்படையாக வைத்து, அமைச்சர்களின் செயல்பாடு, அவர்கள் மீது உள்ள புகார், 2024 லோக்சபா தேர்தல் என்று பல விஷயங்களை மனதில் வைத்து இந்த அமைச்சரவை மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

உத்தரவு

உத்தரவு

இந்த நிலையில்தான் தமிழ்நாடு அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்கள் எல்லோருக்கும் முக்கியமான மெசேஜ் ஒன்று முதல்வர் ஸ்டாலின் தரப்பிடம் இருந்துள்ளதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி அமைச்சர்கள் இனி மாதம் மாதம் தங்களின் துறை குறித்து மேற்கண்ட ரிப்போர்ட்டை கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. தங்கள் துறையில் அவர்கள் எடுத்த முடிவுகள் என்னென்ன, அவர்கள் செலவு செய்த நிதி எவ்வளவு, புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்ட விவரங்கள், பழைய திட்டங்களின் நிலை, துறை ரீதியான கோரிக்கைகள், பிரச்சனைகள் என்னென்ன என்று இந்த ரிப்போர்ட்டில் அறிக்கையாக கொடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

இனி கட்டாயம்

இனி கட்டாயம்

அதோடு இனி அமைச்சர்கள் எல்லோரும் வாரத்துக்கு நான்கு நாட்கள் கோட்டைக்கு வந்தாக வேண்டும். கோட்டையில் இவர்கள் 4 நாட்கள் இருக்க வேண்டும். முதல்வர் எப்போது வேண்டுமானாலும் அமைச்சர்களை அழைப்பார். அதனால் கோட்டையில் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அறைகளில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அமைச்சரவை மாற்றத்திற்கு பின் அமைச்சர்கள் யாரும் தங்களுக்கு இனி பிரச்சனை இல்லை என்று லேசில் இருந்து விட கூடாது, பணிகள் முறையாக நடக்க வேண்டும் என்று முதல்வர் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது.

English summary
CM Stalin important order to minister days after the cabinet change in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X