தமிழகத்தில் சொகுசு கப்பல் சுற்றுலா திட்டம்.. தொடங்கி வைத்த முதல்வர்! தண்ணீரில் மிதக்கும் "சொர்க்கம்!"
சென்னை: சென்னையில் இருந்து ஆழ்கடலுக்கு சென்று திரும்பும் வகையில் சொகுசு கப்பல் சுற்றுலா திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
Recommended Video
கோர்டிலியா குரூஸ் (Cordelia cruise) சொகுசு கப்பலானது தண்ணீரில் மிதக்கம் சொர்க்கம் போல் காட்சியளிப்பதால் அதில் பயணிக்க ஏராளமானோர் ஆர்வம் காட்டுகின்றனர்.
வெளிநாடுகளிலும் இந்தியாவில் கோவா உள்ளிட்ட ஒரு சில குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே இது போன்ற சொகுசு கப்பல் சுற்றுலா திட்டங்கள் இருக்கிற நிலையில், இப்போது நம்ம தமிழகத்திலேயே இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சொகுசு கப்பல்
சென்னையில் இருந்து 2 நாள் பயணமாக ஆழ்கடல் பகுதிக்கு சென்று திரும்பும் வகையில் சொகுசு கப்பல் சுற்றுலா திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். சென்னை துறைமுகத்தில் கொடியசைத்து கப்பலை தொடங்கி வைத்த முதல்வர், கப்பலின் கேப்டன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினார். கப்பல் இயக்கப்படும் அறைக்கு முதல்வரை அழைத்துச் சென்ற கேப்டன் எவ்வாறு கப்பல் இயக்கப்படும் என்பதை விவரித்தார்.

சுற்றிப்பார்த்தார்
மேலும், கோர்டிலியா குரூஸ் (Cordelia cruise) சொகுசு கப்பலை முழுமையாக சுற்றிப்பார்த்த முதல்வர் ஸ்டாலின் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் உட்பட பல்வேறு விவகாரங்கள் பற்றி கேட்டறிந்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் துறையின் உயர் அதிகாரிகள் அது தொடர்பாக விளக்கி எடுத்துக்கூறினார்கள்.

முக்கிய சாதனை
சொகுசு கப்பல் மூலம் ஆழ்கடலுக்கு சென்று திரும்பும் சுற்றுலா திட்டமானது தமிழக வரலாற்றில், குறிப்பாக தமிழக சுற்றுலாத்துறை சாதனைகளில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அறிமுகமாகியுள்ள சொகுசு கப்பல் சுற்றுலா திட்டத்துக்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயித்துள்ளது என்ற தகவல் வெளியாகவில்லை.

அதிக வரவேற்பு
ஆழ்கடல் பகுதிக்கு 2 நாள் பயணமாக சொகுசு கப்பலில் சென்று வரும் இந்த சுற்றுலா திட்டத்துக்கு, மக்கள் மத்தியில் முதற்கட்டமாக அமோக வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. முதல் நாளான இன்றே ஆயிரக்கணக்கானோர் அதில் பயணம் செய்ய முன் பதிவு செய்துள்ளனர். கப்பலை கொடியசைத்து தொடங்கி வைக்க வருகை தந்த முதல்வர் ஸ்டாலின், பயணிகளை நோக்கி கையசைத்து பயணம் சிறப்புடன் இருக்க வாழ்த்தினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications