எடப்பாடியை மாட்டிவிட்ட ஸ்டாலின்.. மொத்தமாக 4 ஆக பிரியும் வாக்குகள்.. திமுகவிற்குத்தான் சாதகமாமே
சென்னை: சட்டசபையில் வந்த இட பிரச்சனையால் அதிமுக எடப்பாடி - ஓபிஎஸ் இடையே மேலும் பிளவுபட்டுள்ளது. இவர்கள் எல்லாம் பிரிந்து கிடப்பது திமுகவிற்குத்தான் சாதகம், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்காக சிங்கிள் பிளான் ஒன்றை திமுக களமிறக்க உள்ளதாம். அதாவது ஒற்றை இலக்க பிளான். அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை கொடுத்தது போல 10 தொகுதி தரப்படாது. ஒற்றை இலக்கத்தில் 8 தொகுதிகள் வரை மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம் விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 1 இடங்கள் மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் இவர்களுக்கு தலா 2 தொகுதிகள் வழங்கப்பட்டன. இந்த முறை 2 இடங்கள் வழங்கப்படாது. மாறாக ஒரே ஒரு தொகுதி மட்டுமே வழங்கப்படும். காங்கிரஸ் கட்சிக்கு திமுகவின் ராஜ்ய சபா இடங்களில் ஒன்று வழங்கப்படும். மற்றபடி 25 - 30 இடங்களில் திமுக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் செக் வைத்துள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில் , லோக்சபா தேர்தலில் கூட்டணி இல்லாமல் நிற்பது என்பது கஷ்டம். தேமுதிக, பாமக இதில் செலவு செய்யாது. அதிமுகவிற்கு இது முக்கியமான தேர்தல் இல்லை. அதனால் அவர்களும் செலவு செய்ய மாட்டார்கள். தமிழ்நாட்டில் அதிமுக வெல்ல வாய்ப்பு குறைவு என்றாலும் கூட அவர்கள் செலவு செய்வார்கள். பாமகவிற்கு ராஜ்ய சபா இடம் கிடைப்பது கஷ்டம்.
ராஜ்ய சபா இடங்களை பாமகவிற்கு கொடுக்க வாய்ப்பு குறைவு. அதனால் பாமக பாஜக உடன் கூட்டணி வைக்குமா என்ற கேள்வி உள்ளது. அதிமுகவும் கூட பாமகவிற்கு ராஜ்ய சபா கொடுக்காது. அதனால் அதிமுக உடன் பாமக சேருமா என்பதும் கேள்வி. ஒரே வழி.. பாமகவிற்கு அதிமுக அதிக இடங்களை வேண்டுமானால் கொடுக்கலாம். அப்படி கொடுத்து வேண்டுமானால் கூட்டணி அமைக்க பார்க்கலாம்.
அதேபோல் அன்புமணி இந்த முறை கூட்டணி முறையாக அமைந்தால் லோக்சபா தேர்தலில் கூட நேரடியாக நிற்கலாம். பாமக அதிமுகவுடனும் பேசிக்கொண்டு இருக்கிறது. அதே சமயம் பாஜக உடனும் நெருக்கமாக பேசி இருக்கிறது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வரும் வாய்ப்பு உள்ளதால்.. பாமக அவர்களுடன் நெருக்கம் காட்டுகிறது. கூட்டணி வந்துவிட்டால் நல்லது. அவர்கள் ஆட்சிக்கு வருவார்கள் . அவர்கள் வந்தால் நமக்குத்தான் நல்லது என்று நினைப்பார்கள்.
பாஜக தமிழ்நாட்டை கவனிக்கவில்லை. இந்தியா கூட்டணியை உடைக்க தீவிரமாக அவர்கள் பணிகளை செய்கிறார்கள். அப்படி இருக்க தமிழ்நாட்டில் கூட்டணி அமைக்க பெரிதாக நினைக்கவில்லை.
கவனம் இல்லை: அவர்கள் இங்கே கவனம் செலுத்தவில்லை. மத்தியில் இருப்பவர்கள் யாரும் அதிமுகவை விமர்சிக்கவில்லை. மாநில பாஜக தலைவர்கள் மட்டுமே அதிமுகவை சீண்டுகிறார்கள். இப்படி இருக்க .. அதிமுக - பாஜக இடையே என்ன ஆகும் என்று பார்க்க வேண்டும். பாமக, தேமுதிக இதை எல்லாம் பார்த்துவிட்டுதான் காய் நகர்த்தும். ஒரே வழிதான் இருக்கிறது. இவர்கள் எல்லாம் சேர்ந்தால்தான் கூட்டணி வரும்.
இன்னொரு பக்கம் திமுகவிற்கு எதிரான வாக்குகள் சீமான் - எடப்பாடி - ஓபிஎஸ் - பாஜக என்றெல்லாம் பிரியும். இப்போது ஓபிஎஸ் - எடப்பாடி இட பிரச்சனையில் ஸ்டாலினே தலையிட்டுள்ளார். அப்படி இருக்க வாக்குகள் கண்டிப்பாக பிரியும் . சீட் பிரச்னையை பேசி ஸ்டாலின் எடப்பாடியை மாட்டிவிட்டுள்ளார். சட்டசபையில் வந்த இட பிரச்சனையால் அதிமுக எடப்பாடி - ஓபிஎஸ் இடையே மேலும் பிளவுபட்டுள்ளது. இவர்கள் எல்லாம் பிரிந்து கிடப்பது திமுகவிற்குத்தான் சாதகம், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications