காலையிலேயே ஆய்வில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின்.. துணை முதல்வர் உதயநிதி.. அடையாறில் பணிகள் துரிதம்
சென்னை: அடையாறு கடலில் கலக்கும் முகத்துவாரம் பகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை மீண்டும் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் ஆய்வில் ஈடுபட்டார். அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இரண்டாவது முறையாக இன்று பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் மழை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் அடையாறு ஆறு வழியாக கடலில் கலந்து வருகிறது. அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில் உள்ள மண் படுகைகளைத் தூர்வாரி அகலப்படுத்தும் பணிகள் செப்டம்பர் மாதம் முதல் நடைபெற்று வருகின்றன. முகத்துவாரம் மண் படுகையினால் மூடப்படும் நிகழ்வானது கடல் அலைகளால் தொடர்ந்து ஏற்படுகிறது.
வடகிழக்குப் பருவமழை தீவிரமானதால் சென்னை சீனிவாசபுரத்தில் அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் அகலப்படுத்தும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்கவும் அவர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, போர்க்கால அடிப்படையில் படிப்படியாக இயந்திரங்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு தற்போது 12 பொக்லைன் இயந்திரங்களும், 4 ஜேசிபி இயந்திரங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணிகளை முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று (அக்டோபர் 26) காலை மீண்டும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது முதல்வருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் ஆய்வில் ஈடுபட்டார். நீர்வளத்துறை அதிகாரிகளும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.












Click it and Unblock the Notifications