காலையிலேயே.. டிராக், டி-ஷர்ட்டோடு களத்தில் இறங்கிய ஸ்டாலின்.. அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு
சென்னை: சென்னை சீனிவாசபுரம் அருகே அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆய்வு செய்துள்ளார். முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழையையொட்டி அடையாறு முகத்துவார பகுதியில் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே தொடங்கும் அடையாறு ஆறு 42.5 கிலோ மீட்டர் பயணித்து சென்னை பட்டினப்பாக்கம் அருகே வங்கக்கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் பல்வேறு ஏரிகளின் உபரி நீர் மட்டுமின்றி சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளின் இருந்து கழிவுநீரும் கலந்து வருகிறது.

அடையாறு ஆற்றை சீரமைப்பதற்கான பணிகள் சென்னை வெள்ள தடுப்பு அறக்கட்டளை வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடையாறு ஆறு, முகத்துவார பகுதி மற்றும் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை சீனிவாசபுரம் அருகே அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆய்வு செய்தார். முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications