Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அறிவிக்காமல் நின்ற சாகித்ய அகாடமி விருது! சட்டென செம்மொழி விருதை அறிவித்த முதல்வர்! சிபிஎம் வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படும். இந்த ஆண்டு திடீரென அறிவிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தேசிய அளவில் சிறந்த படைப்பாளருக்கு செம்மொழி இலக்கிய விருது வழங்கப்படும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இந்த அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்திருக்கிறது.

இந்த ஆண்டு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரான, ச.தமிழ்செல்வனின் 'தமிழ் சிறுகதையின் தடங்கள்' எனும் படைப்புக்கு விருது அறிவிக்கப்பட இருப்பதாக பேச்சுக்கள் எழுந்தன. ஆனால், திடீரென அறிவிப்பு அப்படியே நின்றுபோன்றது.

CM Stalin tamil nadu CPM

விருது அறிவிப்பு

இந்நிலையில் அகாடமி விருதுகளில், மத்திய அரசின் தலையீடு அதிகமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. சோ.தரமன் போன்ற அகாடமி விருது பெற்றவர்கள், தமிழ்ச்செல்வனுக்கு மட்டுமல்ல.. 24 மொழிகளுக்கும் அறிவிக்கவில்லை என்று கூறியிருக்கின்றனர். 24 மொழிகளிலும், முற்போக்கு படைப்புக்குதான் விருது வழங்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை விருது பற்றிய அறிவிப்பே வெளியாகவில்லை. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின், செம்மொழி இலக்கிய விருது குறித்த அறிவிப்பு வரவேற்பை பெற்றிருக்கிறது.

செம்மொழி விருது

இது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறுகையில், "தமிழ்நாடு அரசு சார்பில் தேசிய அளவில் செம்மொழி இலக்கிய விருதுகள் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மகிழ்வுடன் வரவேற்கிறது.

முதல்வரின் அறிவிப்பு

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம், மராட்டியம் ஆகிய செம்மொழிகளில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படைப்புகளுக்கு தனித்தனியாக விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது பொருத்தமானது. இந்த விருதுகளை தேர்வு செய்ய சுயேச்சை தன்மை கொண்ட குழுக்கள் அமைக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

அறிவிக்கப்படாத விருது

ஒன்றிய பாஜக கூட்டணி அரசு அனைத்து அமைப்புகளையும் தனது கைப்பாவையாக மாற்றி வருகிறது. இந்தாண்டு சாகித்ய அகாடமிக்கான படைப்பாளிகள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஒன்றிய அரசு தலையிட்டு விருதுகள் அறிவிப்பதை நிறுத்தி வைத்துள்ளது; இதுவரை இந்த விருதுகள் அறிவிக்கப்படவில்லை.

தமிழ்நாடு அரசு

தங்களது பிற்போக்கு கருத்துகளுக்கு ஆதரவானவர்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு கருதுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த நிலையில், இந்தியாவின் பன்முகத்தன்மையை உயர்த்திப் பிடிக்கும் வகையிலும், பல்வேறு மொழிகளில் எழுதப்படும் இலக்கியங்களை அங்கீகரிக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முடிவு சிறப்பான ஒன்றாகும்.

தமிழுக்கான நிதி

அரசியல் சட்டத்தின் 8 ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளை ஒன்றிய அரசின் அலுவல் மொழிகளாக அறிவிக்க ஒன்றிய அரசு மறுக்கிறது. தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளுக்கு குறைவான நிதியே ஒதுக்கும் நிலையில், சமஸ்கிருத மொழிக்கு மட்டும் கோடிக்கணக்கில் அள்ளித் தருகிறது.

அனைத்து மொழிகளையும் சமமாக நடத்துவதும், அங்கீகரிப்பதுமே இந்திய ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும். அந்த வகையில், தமிழ் மட்டுமின்றி ஏனைய மாநில மொழிகளில் வெளியாகும் படைப்புகளுக்கும் விருது வழங்குவது என்ற தமிழ்நாடு அரசின் முடிவு மொழி வெறுப்பரசியலுக்கு எதிரான ஒரு நடவடிக்கை என்ற வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது" என தெரிவித்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+