ஆகஸ்ட் மாதம் முடிக்கப்பாருங்க! செப்டம்பரில் மழைக்காலம் வந்துரும்! வேலையை வேகப்படுத்திய ஸ்டாலின்!
சென்னை: சென்னை புறநகர் பகுதியில் மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத் தடுப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் வேலையை வேகப்படுத்தியுள்ளார்.
ஆகஸ்ட் மாதத்திற்குள் பணிகளை முடிக்குமாறு பொதுப்பணித்துறை பொறியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
முதலமைச்சர் சொல்லிவிட்டார் என்பதற்காக பொய்யாக அதற்கு தலையை ஆட்டாமல், செப்டம்பர் மாதம் வரை டைம் வேண்டும் என கேட்டு வாங்கினார் பொறியாளர்

முதல்வர் நேரில்
சென்னை புறநகர் பகுதியான மதுரவாயலை ஒட்டியுள்ள தந்திகல் கால்வாயில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்பு பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். அவருடன் சென்ற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேள்விகளால் குடைந்தெடுத்தார். இந்தப் பணிக்கு யார் காண்டிராக்டர், எப்போது தொடங்கிய பணி என தனக்கே உரிய பாணியில் அதிகாரிகளை டிரில் வாங்கினார்.

ஆகஸ்ட் மாதம்
நடைபெற்று வரும் பணிகளை பொறுமையாக கவனித்த முதலமைச்சர் ஸ்டாலின், எப்போது இந்தப் பணிகளை முடிக்கப் போகிறீர்கள் என அங்கிருந்த நிர்வாகப் பொறியாளரிடம் வினவினார். அதற்கு பதிலளித்த அவரோ, ஐயா செப்டம்பர் மாதம் 20-ஆம் தேதிக்குள் முடித்துவிடுவோம் என இழுத்தார். செப்டம்பர் மாதம் கடைசியில் மழைக்காலம் தொடங்கிவிடும், இதனால் ஆகஸ்டில் மாத கடைசிக்குள் முடிக்கப்பாருங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.

சீக்கிரம் முடிங்க
முதலமைச்சர் சொல்லிவிட்டார் என்பதற்காக பொய்யாக அதற்கு தலையை ஆட்டாமல், செப்டம்பர் மாதம் வரை டைம் வேண்டும் என கேட்டு வாங்கினார் பொறியாளர். அதனை ஏற்றுக்கொண்ட முதல்வர், பணிகள் சுணக்கமின்றி நடக்கணும் என அறிவுறுத்திவிட்டு புறப்பட்டார். 4 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஒரு இடத்தில் மட்டும் நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதிகாரிகள் முதல்வரிடத்தில் காலதாமதத்திற்கான விளக்கம் அளித்தனர்.

அமைச்சர் துரைமுருகன்
எல்லா பணிகளையும் ஒரே காண்டிராக்டர் எடுத்திருக்காரா, அந்த விவரத்தை கொடுங்க என்று கேட்டு வாங்கிய அமைச்சர் துரைமுருகன், ஒப்பந்ததாரர்கள் விவரத்தை படித்துப் பார்த்து தெரிந்துகொண்டார். இல்லை சார், அந்த டெண்டர் வேறு இந்த டெண்டர் வேறு என அதிகாரிகள் அவருக்கு விளக்கிக் கூறினர்.












Click it and Unblock the Notifications