நீ எங்கம்மா இருக்க.. இங்கே வா.. தங்கையை சட்டென அழைத்த ஸ்டாலின்.. மிளிர்ந்த கண்கள்.. நொறுங்கிய நொடி!
சென்னை: இன்று கலைஞர் கோட்டத்தை திறந்த போது முதல்வர் ஸ்டாலின் தனது தங்கை செல்வியை அழைத்தது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
திருவாரூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவரை வரவேற்க பிரமாண்டமான வரவேற்புகளெல்லாம் திமுக தரப்பில் செய்யப்பட்டிருந்தன. அங்கே தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் அவர் கலந்து கொள்ள இருந்தார்.
7,000 சதுர அடி பரப்பளவில் 12 கோடி ரூபாய் மதிப்பில் இந்த கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின் உடன் இணைந்து நிதிஷ் குமார் திறந்து வைக்க இருந்தார்.

ஆனால், கடைசி நிமிடத்தில், உடல் நிலையை காரணம் காட்டி கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்க வர இயலாத சூழலை திமுக தலைமைக்கு தெரிவித்துவிட்டார் நிதிஷ். அதாவது விழாவுக்கு வருவதை கேன்சல் செய்துவிட்டார்.
இதையடுத்து பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் இந்த கோட்டத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், விழாவில் பங்கேற்று சிறப்பித்திருக்கும் தேஜஸ்வி யாதவுக்கு நன்றி. என் தந்தைக்கு என் தாய் எழுப்பிய அன்பு கோட்டையாக நான் கருதுகிறேன். என் தந்தைக்கு என் தாய் எழுப்பிய அன்பு கோட்டை இந்த இடம்.
மறைந்த பிறகும் கோட்டம் கட்ட காரணமாக அமைந்தவர் கருணாநிதி.பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டாவிட்டால் தமிழ்நாடு என்ற மாநிலமே இல்லாமல் போய்விடும் பாஜகவின் மத்திய பாசிச ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். நம் வெற்றிக்கு முன்னால் ஒற்றுமை வேண்டும்.
மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது தமிழ், தமிழினம், தமிழ்நாடு, இந்தியாவுக்கும் கேடு; தமிழ்நாட்டை போன்று ஜனநாயக சக்திகள் ஒன்றிணைவது அவசியம். பாஜகவை எதிர்க்கும் சக்தி நம்மிடம் உள்ளது. இன்னமும் கலைஞர் வாழ்கிறார், ஆள்கிறார் என்பதன் அடையாளமாக இந்த கோட்டம் உள்ளது.
வாழ்வில் எத்தனை ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் என் தாய் அன்பு மாறாதவர். மன்னர்கள் தாங்கள் இருக்கும் போது கோட்டம் கட்டுவார்கள். இறந்த பின் நாம் கலைஞருக்கு கோட்டம் கட்டி உள்ளோம்,.. கலைஞருக்கு நான் மட்டும் மகன் அல்ல, திமுக உடன்பிறப்புகள் அனைவரும் கலைஞருடைய பிள்ளைகள்தான்.
இந்தியாவில் ஜனநாயகத்தை காக்கக்கூடிய பொறுப்பை ஏற்று அடித்தளமிட்டுள்ளது பிகார் மாநிலம்; பாட்னாவில் ஜூன் 23ல் நடைபெறும் ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பங்கேற்கிறேன், என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
சுவாரசிய சம்பவம்: இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் - தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கோட்டத்தை திறக்கும் போது முதல்வர் ஸ்டாலினின் தங்கை செல்வி அந்த இடத்தில் இல்லாமல் பின்னாடி நின்று கொண்டு இருந்தார்.
இதையடுத்து அவரை தேடிய ஸ்டாலின்.. எங்கே போனே.. இங்கே வா என்பது போல அழைத்தார். அதன்பின் அவர் வந்த பின்புதான் கோட்டத்தின் வாயிலை திறந்தார்.
என்ன சொன்னார் தேஜஸ்வி: இந்த நிகழ்வில் பேசிய பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், திராவிட மாடல் தத்துவத்தை கலைஞர் கருணாநிதி எடுத்துரைத்து நிலை நாட்டினார். உள்ளாட்சி கட்டமைப்புகளில் பெண்கள் பங்கு வகித்து நிர்வகிக்க முக்கியத்துவம் கொடுத்தார் கலைஞர் கருணாநிதி
கலைஞரின் வழியில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி செய்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் கருணாநிதியின் வழியில் சமூக நீதியை நிலை நாட்டி வருகிறார் என்பதை எண்ணி பெருமை கொள்கிறேன்.சாதிய, சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை களைத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி,. என்று தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications