உச்ச நீதிமன்றத்தையே எதிர்க்கும் அளவு.. முதல்வருக்கு செந்தில் பாலாஜி மீது பாசமா? பாய்ந்து வந்த பாஜக
சென்னை: திமுகவை சீண்டிப்பார்க்க வேண்டாம் என்று பாஜகவை எச்சரித்து முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்து பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, முதல்வர் மு.க ஸ்டாலின் உச்சநீதிமன்றத்தையா? எதிர்க்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சார் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை மூலமாக கொடுக்கப்படுகிற அநியாயமான தொல்லைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல் என்பதில் யாருக்கும் கொஞ்சமும் சந்தேகமில்லை!
பத்து ஆண்டுக்கு முன்னர் உள்ள பழைய புகாரை வைத்து, 18 மணி நேரம் அடைத்து வைத்து, மன அழுத்தம் கொடுத்து, மனரீதியாகவும் - உடல் ரீதியாகவும் பலவீனப்படுத்தி, உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இதயநோயை உருவாக்கி இருக்கிறார்கள் என்றால், இதைவிட அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் இருக்க முடியுமா?

இந்தப் பழனிசாமி அடிமைக் கும்பல் மாதிரி மற்ற கட்சிகளையும் நினைக்கிறது பா.ஜ.க. தலைமை. அது நினைக்கிற மாதிரியான கட்சி இல்லை தி.மு.க! உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயப்படுபவர்கள் இல்லை தி.மு.க.காரர்கள்! சுவரில் அடித்த பந்து திரும்ப வந்து முகத்தில் அடிக்கிற மாதிரிதான் ஒவ்வொரு தி.மு.க.காரனும் வளர்க்கப்பட்டிருக்கிறான்" என மிகவும் காட்டமாக பேசியிருந்தார்.
இந்த நிலையில், முதல்வர் மு.க ஸ்டாலின் இந்த கருத்தை கடுமையாக சாடி பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நாராயணன் திருப்பதி கூறியதாவது:- "தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை! செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கை அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல். 10 வருடத்திற்கு முன் உள்ள பழைய புகார்.
மன ரீதியாக, உடல் ரீதியாக பலவீனப்படுத்தி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருதய நோயை உருவாக்கியிருக்கிறார்கள்" : தி மு க தலைவர் மு.க.ஸ்டாலின். கடந்த மே16ம் தேதியன்று, செந்தில் பாலாஜி மீது புதிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க சொன்னது உச்ச நீதிமன்றம். மேலும், இதில் ஏதாவது தவறு ஏற்படுமேயாயின் உச்சநீதிமன்றமே ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், அமலாக்கத்துறை தன் விசாரணையை தொடரலாம் என்றும், அரசுப் பணியில் இருப்பவர்கள் மீது சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்த குற்றச்சாட்டு எப்போது பொது வெளியில் வந்து விட்டதோ அது குறித்து முதல் தகவல் அறிக்கையை பதிய வேண்டியது அமலாக்கத்துறையின் கடமையாகும் என்றும் உத்தரவிட்டுள்ளது. யாரை எதிர்க்கிறார் திரு ஸ்டாலின் அவர்கள்? உச்சநீதி மன்றத்தையா? யாருக்கு எச்சரிக்கை விடுக்கிறார் திரு.ஸ்டாலின் அவர்கள்? உச்ச நீதிமன்றத்திற்கா?
இருதய நோயை எப்படி ஒரே நாளில் உருவாக்க முடியும்? 10 வருடத்திற்கு முன் உள்ள புகார் மீது நடவடிக்கை எடுக்க சொன்னது உச்சநீதிமன்றம் என்று தெரிந்தும் அநியாயமான தொல்லை கொடுக்கப்படுகிறது என்றெல்லாம் திரு. ஸ்டாலின் அவர்கள் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.. உச்சநீதிமன்றத்தையே எச்சரிக்கும் அளவிற்கு அப்படியென்ன செந்தில் பாலாஜி மீது பாசம்?.. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
-
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications