10 ஃப்ளோர்.. அதிநவீன வசதிகள்.. சென்னையில் உருவாகும் பிரமாண்ட ஹாஸ்டல்.. அடிக்கல் நாட்டினார் ஸ்டாலின்!
சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா கல்லூரியில் மாணவர் விடுதி கட்டடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சுமார் ரூ.44.5 கோடியில் 1.01 லட்சம் சதுர அடி பரப்பில், 10 தளங்களுடன் நவீன வசதிகளுடன் இந்த விடுதி அமைக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-2023-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் "சென்னை எம்.சி.ராஜா கல்லூரி விடுதி வளாகத்தில் தற்போது காலியாக உள்ள இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய மாணவர் விடுதி ரூ.40 கோடி செலவில் கட்டப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்தார்.

இதனை செயல்படுத்தும் விதமாக, சென்னை எம்.சி.ராஜா கல்லூரி விடுதி வளாகத்தில் தற்போது காலியாக உள்ள இடத்தில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் சுமார் 1,01,101 சதுர அடி பரப்பளவில் 10 தளங்கள் கொண்ட நவீன வசதிகளுடன் கூடிய ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டடம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, மாணவர் விடுதி அமைக்கும் பணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ வேலு, பொன்முடி, கயல்விழி செல்வராஜ், மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications