தமிழ்நாட்டில் பள்ளிகள், தியேட்டர்கள் திறக்கப்படுகிறதா? மேலும் தளர்வுகளா?.. ஸ்டாலின் தீவிர ஆலோசனை
ஸ்டாலின் லாக்டவுன் நீட்டிப்பது குறித்து இன்றைய தினம் ஆலோசனை நடத்துகிறார்
சென்னை: தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் 11 மணிக்கு ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்றைய தினம் கூட்டம் திடீர் ரத்தான நிலையில், இன்றைய கூட்டம் நடந்து வருகிறது.. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 23ம் தேதி காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்தது... இதனால் பலர் உயிரிழந்தனர்.. தொற்று பாதிப்புக்கு ஏராளமானோர் ஆளானார்கள்.. ஒரு நாளைக்கு 30 ஆயிரத்தை கடந்து தொற்று எண்ணிக்கை உயர்ந்தது.
எனவே, நம் மாநில அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்த நிலையில், தொற்று பாதிப்பானது 2,000-க்கும் கீழே குறைந்தது.. இருந்தாலும், சென்னை, கோவை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் தொற்று குறையாமல் இருந்தது.. இங்கும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை கையில் எடுத்ததையடுத்து, கொரோனா பரவல் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது... பிற மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

எச்சரிக்கை
கொரோனா வைரஸ் 3வது அலையானது, இந்தியாவுக்கு வர உள்ளதால், மத்திய சுகாதாரத்துறையும், ஏராளமான வல்லுநர்களும், டாக்டர்கள் நம்மை அலர்ட் செய்து வருகிறார்கள்.. கடந்த மாதமே 3வது அலை பரவல் பாதிப்பு கேரளாவுக்கு அதிகம் இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருகின்றன.. 3வது அலை பரவலால் கோவை மாவட்டத்துக்குதான் அதிக பாதிப்பும் உள்ளதாக கூறப்பட்டுள்ளன.. எனவே, தமிழகத்தில் லாக்டவுன் போடுவதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதா என்ற சந்தேகமும் நீடித்து கொண்டிருக்கிறது.

வாய்ப்பு
தற்போதுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது வரும் 23-ம் தேதி காலை 6 மணியுடன் நிறைவுபெறுகிறது... தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களை திறப்பதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை... இவைகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

தொற்று
இந்நிலையில், எனவே, ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடந்து வருகிறது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மருத்துவ வல்லுநர்கள், பல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
Recommended Video

விவரங்கள்
இன்று காலை 11 மணிக்கு தொடங்கி இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.. இந்தக் கூட்டத்தில் 9ம் வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என ஏற்கனவே எதிர்பார்ப்பு நிலவி வந்தது.. 3வது அலை முன்னெச்சரிக்கை தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.. தியேட்டர்கள் திறப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.. இதையடுத்து, மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா, அல்லது தளர்வுகள் அளிக்கப்படுமா என்பது குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும்..!












Click it and Unblock the Notifications