உளவுத்துறை சொன்ன சீக்ரெட் தகவல்.. கண்கள் சிவந்த ஸ்டாலின்.. காட்டமான திமுக.. என்ன நடந்தது?
சென்னை: தமிழகத்தில் மணல் குவாரிகள் மூடிக்கிடப்பதால் உள்கட்டமைப்புக்கு பெரிதும் உதவும் கட்டுமான தொழில்கள் முடங்கிக் கிடக்கின்றன. இதனால் அரசுக்கு வரவேண்டிய வருவாயும் தடைப்பட்டுக் கிடக்கிறது.
தமிழகத்தில் மணல் விற்பனையை தமிழக அரசே செய்து வருகிறது. ஆனால், ஆற்றுப் படுகைகளில் அனுமதிக்கப்பட்ட குவாரிகளில் இருந்து மணல் அள்ளிக் கொடுக்கும் ஒப்பந்தத்தை புதுக்கோட்டை எஸ்.ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் மற்றும் கரிகாலன் ஆகிய மூவரிடம் ஒப்படைத்தது திமுக அரசு. இவர்கள் ஏற்கனவே அதிமுக ஆட்சியின் போது தொழிலதிபர் சேகர் ரெட்டி தலைமையின் கீழ் பணிபுரிந்தவர்கள்.

மணல் தொழிலில் இருந்து சேகர் ரெட்டி விலகியப் பிறகு இந்த மூவர் அணி அதனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. அதிமுக ஆட்சியில் கோலோச்சிய இவர்கள், திமுக ஆட்சியிலும் கொடி கட்டிப்பறந்தனர். இந்த நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜகவின் வெற்றிக்காக அந்த கட்சிகளுக்கு தேர்தல் நிதி வழங்கினர். 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அக்கட்சிகளுக்காக தேர்தல் செலவுகளை கவனித்துக்கொள்ள சம்மதித்துள்ளனர். இந்த சீக்ரெட் விவகாரம் உளவுத்துறை மூலம் அறிந்த திமுக தலைமை, அவர்கள் மீது செம காட்டம் கொண்டது.
இதனால், இந்த மூவர் அணியிடமிருந்து மணல் பிஸ்னெஸ்சை வேறு நபர்களுக்கு மாற்றிக்கொடுக்க ஆட்சித் தலைமை முடிவு செய்தது. இதனை அடுத்து மணல் குவாரிகளை மூடியது அரசு. மணல் விற்பனையும் தமிழகம் முழுவதும் நடக்கவில்லை. மணல் விற்பனை இல்லாததால், எம்.சாண்ட் விலை அதிகரித்தது ; அதிகரித்தும் வருகிறது. முறையான மணல் விற்பனை இல்லாததால், கட்டுமான பணிகளும் தேக்கமடைந்து வருகின்றன. ஏற்கனவே இந்த மூவர் அணியின் மணல் பிஸ்னெஸ்சில் பல ஆயிரம் கோடிகளுக்கு சட்டவிரோத பணபரிவர்த்தனை புழங்குவதாக வந்த புகார்களின் அடிப்படையில் , இவர்களுக்கு எதிரான ரெய்டுகளை நடத்தியது அமலாக்கத்துறை.
அதனடிப்படையில் சட்டவிரோத மணல் குவாரிகள் மூடப்பட்டன. இப்படிப்பட்ட சூழலில்தான், மணல் குவாரிகள் செயல்படாததால் தமிழக அரசும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர, மூவர் அணிக்கு பதிலாக, வேறு மூன்று பேருக்கு பிரித்து தர முடிவு செய்திருக்கிறது. அதன்படி, மயிலாடுதுறையை சேர்ந்த ராஜப்பா, நாமக்கல்லை சேர்ந்த பொன்னர்-சங்கர், கரூர் கே.சி.பழனிச்சாமி ஆகிய மூவரிடம் மேலிடம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் ராஜப்பாவுக்காக, தலைமைக்கு நெருக்கமான சீனியர் அமைச்சர் ஒருவரும், கே.சி.பி.க்காக மற்றொரு முக்கிய அமைச்சர் ஒருவரும் சிபாரிசு செய்துள்ளனர்.
இரட்டையர்களான பொன்னர்-சங்கர், வேறு ரூட்டில் முயற்சித்து வருகிறார்கள். மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை கொடுப்பதாக கோட் பண்ணியிருக்கிறார் ராஜப்பா. மற்றவர்கள் இதை விட குறைவாக கோட் பண்ணியுள்ளனர். ராஜப்பாவுக்கு முதல் வாய்ப்பைத் தந்த மேலிடம், கோட் பண்ணிய தொகையை குறிப்பிட்ட தேதியில் கட்டச்சொல்லி வலியுறுத்தியது. ஆனால், மொத்த தொகையையும் அவரால் ரெடி செய்ய முடியவில்லை. மணல் பிஸ்னெஸ்சில் உள்ள பலரிடமும் தொகையை சேகரிக்கத் தொடங்கினார். ஆனாலும் அவரால் புரட்டமுடியவில்லை.
மேலும் இந்த பிஸ்னெஸில் ராஜப்பாவின் உண்மையான முகம் என்னவென்பதை தலைமைக்கு சீனியர் நிர்வாகிகள் பலர் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் ராஜப்பா மீது தலைமைக்கு அப்-செட் ! அதேசமயம், அவருக்காக சிபாரிசு செய்து வரும் அமைச்சர், தலைமையை சமாதானப்படுத்தியிருக்கிறார். இந்த நிலையில், மணல் காண்ட்ராக்ட்டை யாருக்கு கொடுப்பது ? என்கிற உச்சபச்ச டென்சனில் இருந்து வருகிறது ஆட்சித் தலைமை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications