"ராயல் பிளான்".. மொத்தமாக எல்லாம் மாற போகிறது.. ஸ்டாலின் போட்ட முக்கிய உத்தரவு.. மக்கள் குஷி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மெரினா தொடங்கி கோவளம் வரை நல்ல போக்குவரத்து வசதியையும், பல புதிய சுற்றுலா வசதிகளையும் ஏற்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னையின் அடையாளங்களில் ஒன்று மெரினா பீச். உலகின் இரண்டாவது பெரிய பீச்.. இந்தியாவின் மிகப்பெரிய பீச்தான் சென்னை மெரினா பீச். மொத்தமாக 12 கிமீ நீளம் கொண்ட இயற்கையான கடற்கரை இது. இந்த நிலையில் மெரினா கட்டுரையில் லைட் ஹவுஸ் தொடங்கி அண்ணா சதுக்கம் வரை இருக்கும் சாலையில் பல அலங்கார அமைப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

கண்ணகி சிலை, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா சமாதி, உழைப்பாளர், காந்தி சிலை என்று பல சிலைகள், நீர் ஊற்று, அலங்கார கற்கள், சிறிய கூட்டம் நடத்தும் மேடைகள் என்று பல அமைப்புகள் வைக்கப்பட்டு உள்ளன.

மெரினா

மெரினா

இங்கு இருக்கும் செயற்கை நீர் ஊற்று சமீபத்தில்தான் சீரமைக்கப்பட்டது. அங்கு விளக்குகளும் வைக்கப்பட்டது. அதேபோல் கல் அலங்கார அமைப்புகளும் சீரமைக்கப்பட்டன. இந்த நிலையில்தான் இந்த நிலையில்தான் சென்னை மெரினா பீச்சில் இருந்து கோவளம் வரை இருக்கும் பகுதி முழுக்க புனரமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இங்கே புதிய சுற்றுலா தலங்களை அமைப்பது, வாட்டர் விளையாட்டுகளை ஏற்படுத்துவது, மீனவர்களுக்காக ஜெட் போட்டுகளை வழங்குவது. புதிய பூங்காக்களை ஏற்படுத்துவது. அதேபோல் வாக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங் செல்ல வசதிகளை ஏற்படுத்துவது என்பது போன்ற பணிகளை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

கடற்கரை

கடற்கரை

மெரினா தொடங்கி கோவளம் வரை நல்ல போக்குவரத்து வசதியையும் ஏற்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பெயரில் மொத்தம் 31 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. பாரம்பரியம் கட்டிடங்களை மெருகேற்றுவது, உடற்பயிற்சி வசதிகளை ஏற்படுத்துவது, சுற்றுச்சூழல் மையம் அமைப்பது, கலை மற்றும் நீர் விளையாட்டுகளை அமைப்பது போன்ற பணிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக பல்வேறு துறை சார்ந்த நிர்வாகிகளை களமிறக்கி பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதில் இறுதி முடிவுகளை சென்னை சிஎம்டிஏ எடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மெரினா

மெரினா

மெரினா - கோவளம் இடையே சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் இங்கே விளையாட்டு கூடங்கள், கடல் மற்றும் வான் விளையாட்டு அமைப்புகளை ஏற்படுத்துவதும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த பகுதி மொத்தத்தையும் மாற்றுவது ஏற்றபடி ராயல் பிளான் ஒன்றை களமிறக்க உள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. மெரினா, பெசன்ட்நகர் பீச் இரண்டும் பிரபலமானவை. ஆனால் சென்னையில் 20க்கும் அதிகமான பீச்கள் உள்ளன. இந்த பீச்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன.

 மாற்றம்

மாற்றம்

இவற்றை புனரமைத்து சுற்றுலாத்தலங்களாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் மெரினாவில் 6 கிமீ சாலை பகுதியை புதிதாக அலங்காரம் செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இங்கு புதிய அலங்கார அமைப்புகள், கண்கவர் அமைப்புகள், புதிய விளக்கு அமைப்புகள், சிறிய அளவிலான பார்க்குகள், உணவகங்களை வைக்க வசதி என்று பல ஏற்பாடுகளை செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்காக சென்னை மாநகராட்சி புதிய திட்டங்களை வகுத்து வருகிறது. இதற்காக பல்வேறு துறை நிபுணர்களுடன் சென்னை மாநகராட்சி ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சாலை

சாலை

ஏற்கனவே மெரினாவில் இருக்கும் சாலை ஒரே கடைகள் பயன்படுத்துவதற்காக சிறிய அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் இதை இன்னும் சாலையோர கடைக்காரர்கள் பயன்படுத்தாமல் உள்ளனர். ஸ்மார்ட் புஷ் அமைப்பு கொண்ட தள்ளு வண்டிகள் ஆகும். இதை விரைவில் கடைக்காரர்கள் பயன்படுத்த வசதி ஏற்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 29 கோடி ரூபாய் இல்லாமல் மேலும் சில கோடிகள் விரைவில் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+