Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று பஞ்சாயத்து ராஜ் தினம்.. தமிழகத்தில் கிராம சபை கூட்டம்.. செங்காட்டில் முதல்வர் பங்கேற்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதில் காஞ்சிபுரத்தில் செங்காடு கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு உள்ளார்.

ஆண்டுதோறும் ஏப்ரல் 24 ஆம் தேதி பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இன்றைய தினம் கிராம சபை கூட்டங்கள் நடத்த ஊரக வளர்ச்சி துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

CM Stalin participates in Gram Sabha meeting at Sengadu

மேலும் பிளாஸ்டிக் தடை, பெண்கள் பாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட முக்கிய விஷயங்கள், இந்த கிராம சபையில் விவாதிக்கப்படவுள்ளது.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் இன்றைய தினம் ஊரக வளர்ச்சி மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்கு என்ற தலைப்பில் நடைபெறும் இந்த கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காடு கிராமத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். அங்கு மக்களின் கோரிக்கைகளை கேட்டு, அதற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்து வருகிறார்.

உள்ளாட்சிகள் தினம் நவம்பர் 1 ஆம் தேதி கொண்டாடப்படும் என்றும் ஆண்டிற்கு 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு இன்று கிராமசபை கூட்டம் நடத்தப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+