அருமைத் தம்பி பி.டி.ஆர்.! வேங்கையின் மைந்தன் எம்.ஆர்.கே.! மனம் திறந்து பாராட்டிய முதலமைச்சர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டை மிக சிறப்பாக தாக்கல் செய்ததாக கூறி இரண்டு அமைச்சர்களை சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை அருமைச் சகோதரர் என்றும், வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை வேங்கையின் மைந்தன் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

துபாய் புறப்படுவதற்கு முன்னதாக தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவு உரை ஆற்றிய முதல்வர் ஸ்டாலினின் பேச்சு தொகுப்பு பின்வருமாறு;

 பி.டி.ஆருக்கு பாராட்டு

பி.டி.ஆருக்கு பாராட்டு

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்று மாண்புமிகு நிதித் துறை அமைச்சர் அவர்களும், மாண்புமிகு வேளாண் துறை அமைச்சர் அவர்களும் பதிலுரையாற்றி, இந்த அவையில் இருக்கக்கூடிய அனைவருடைய பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் பெற்றிருக்கிறார்கள். இந்த அரசு மிகச் சிறப்பாக பல திட்டங்களை, பல பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது என்று பல்வேறு மாநிலங்களில், ஏன் வெளிநாடுகளில் இருப்பவர்கள் கூட பாராட்டக்கூடிய அளவிற்கு நம்முடைய அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அப்படிப் பெருமைப்படுகிற அளவிற்கு வந்துகொண்டிருக்கக்கூடிய செய்திகளையெல்லாம் நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

அருமை சகோதரர்

அருமை சகோதரர்

எனவே, இந்த அரசைப் பொறுத்தவரையில் எவ்வளவோ துறைகள் இருந்தாலும், முக்கியமான துறை நிதித் துறைதான். அந்த நிதித் துறையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கக்கூடிய மாண்புமிகு அமைச்சர், என்னுடைய அருமை சகோதரர் மாண்புமிகு முனைவர் திரு. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் மிகச் சிறப்பான வகையில், தன்னிடத்தில் இருக்கக்கூடிய அனுபவங்களைக்கொண்டும், வெளிநாடுகளில் தாம் பெற்றிருக்கக்கூடிய பல நல்ல அம்சங்களையெல்லாம் மனதிலே தேக்கிவைத்துக் கொண்டு, அந்தப் பணியை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள் என்று சொன்னால், உள்ளபடியே பாராட்டுக்குரியவராக அவர் விளங்கிக்கொண்டிருக்கிறார்.

 வேங்கையின் மைந்தன்

வேங்கையின் மைந்தன்

அதேபோலத்தான் நம்முடைய மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் அவர்களும் 'வேங்கையின் மைந்தன்' என்று பெயர் பெற்றவர் அவர். இப்பொழுது 'வேங்கையின் மைந்தன்' மட்டுமல்ல; விவசாயிகளுடைய மைந்தனாக மாறி, அவரும் தன்னுடைய கடமையைச் சிறப்போடு நிறைவேற்றியிருக்கிறார். இது ஒவ்வோர் ஆண்டும் தொடரவேண்டும். அவர்கள் தொடர்வார்கள் என்ற நம்பிக்கை நிச்சயமாக எனக்கு இருக்கிறது. அதை அவர்கள் நிறைவேற்றித் தருவார்கள் என்ற உணர்வோடு, அவர்களை வாழ்த்தி, அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

 இலங்கைத் தமிழர்கள்

இலங்கைத் தமிழர்கள்

அதேபோல், இலங்கைத் தமிழர்கள் இன்றைக்குப் பல துன்பங்களுக்கு, துயரங்களுக்கு ஆளாகியிருக்கக்கூடிய சூழ்நிலையில், அங்கு பரிதவித்துக்கொண்டிருக்கக்கூடிய தமிழர்கள் அண்மையில் தமிழ்நாட்டிற்கு வந்துகொண்டிருக்கின்ற செய்திகளையெல்லாம் நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதுகுறித்து நேற்றையதினமே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதோடு, இது தொடர்பாக, ஒன்றிய அரசிடமும், அங்கிருக்கக்கூடிய அதிகாரிகளிடத்திலும், அமைச்சர்களிடத்திலும் தொடர்பு கொண்டு, இதை எப்படிக் கையாள வேண்டும் என்று சட்டரீதியாக நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். எனவே, விரைவில் அதற்கொரு விடிவுகாலத்தை நிச்சயமாக இந்த தமிழக அரசு ஏற்படுத்தித் தரும் என்ற நம்பிக்கையை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

நம்பர் 1 மாநிலம்

நம்பர் 1 மாநிலம்

ஒன்றை மட்டும் நான் உறுதியோடு சொல்கிறேன். பல நிகழ்ச்சிகளில் நான் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன். இந்தியாவிலேயே நம்பர்-1 முதலமைச்சர் என்ற அந்த பாராட்டைப் பெறுவதிலே எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், அதைவிட எனக்கு பெருமகிழ்ச்சி எதுவென்றால், இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதல் மாநிலம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, நம்முடைய தமிழகம் வர வேண்டும். அந்த அடிப்படையில்தான் நாங்கள் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். எனவே, அப்படிப்பட்ட அந்த வெற்றிக்கு நான் மேற்கொள்ளவிருக்கக்கூடிய துபாய், அபுதாபி பயணம் நிச்சயம் துணை நிற்கும். அதற்கு நீங்கள் வாழ்த்தியிருக்கிறீர்கள். வாழ்த்திய நெஞ்சங்களுக்கு மீண்டும் என்னுடைய சார்பிலே நன்றி தெரிவித்து, அமைகிறேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+