தம்பி உதயநிதி இன்னொரு செங்கல்லுடன் கிளம்பிட்டா என்ன செய்வதுனு பயம் வேண்டாம்?.. முதல்வர் கேள்வி

லோக்சபா எலெக்ஷன் வருது.. தம்பி இன்னொரு செங்கல்லுடன் கிளம்பிட்டா என்ன செய்வதுனு பயம் வேண்டாமா- முதல்வர் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தல் வருகிறதே, இன்னும் மதுரை எய்ம்ஸ் அமைக்காவிட்டால் தம்பி உதயநிதி இன்னொரு செங்கல்லுடன் கிளம்பிடுவாரேனு ஒரு பயம் வேண்டாமா உங்களுக்கு என மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் பரிதி இளம்சுருதியின் திருமணத்தை தலைமையேற்று முதல்வர் ஸ்டாலின் நடத்தி வைத்தார். அப்போது அவர் பேசுகையில் என் மீது மிகவும் பாசம் கொண்டவர் பரிதி இளம்வழுதி. 1980ஆம் ஆண்டு பரிதி இளம்வழுதியை முதல் முதலில் சிறையில்தான் பார்த்தேன். ஈரோடு இடைத்தேர்தலில் பணியாற்றும் நிர்வாகிகள் ஒரு நாள் விடுமுறை பெற்று திருமண விழாவுக்கு வந்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு ஒரு நாள்தான் லீவு. அதன் பிறகு ஈரோடு கிழக்கு தொகுதிக்கு செல்ல வேண்டும். அவர்கள் செல்கிறார்களா என்பதை நான் கண்காணிக்க வேண்டும். இன்றைய தினம்தான் 1969 ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக பதவியேற்றார். எனவே இந்த தேதியில் திட்டமிட்டு இந்த திருமணத்தை நடத்துகிறார்களா இல்லை அதுவே பொருத்தமாக அமைந்துவிட்டதா என தெரியவில்லை.

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகள் எதற்கும் பதில் சொல்ல முடியாத நிலையில் மத்திய அரசு உள்ளது. திமுக நாடாளுமன்ற குழு தலைவராக உள்ள டி.ஆர்.பாலு எழுப்பும் கேள்விகளுக்கு பதில் இல்லை. சேது சமுத்திர திட்டத்தை பற்றி பேசி அதனை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று கேட்டால் அதற்கும் பதில் இல்லை.

2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு

2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவோம், வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் தருவோம் என மோடி சொன்னாரே அந்த வாக்குறுதி என்னவானது? 15 ஆயிரம் இல்லை ரூ 15 ஆவது வங்கிக் கணக்கில் போட்டார்களா இல்லையே!

பதில் இல்லையே

பதில் இல்லையே

நாடாளுமன்றத்தில் ஆ ராசா, கனிமொழி, தயாநிதிமாறன், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலே இல்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தங்கை கனிமொழி கேள்வி கேட்கிறார், அதற்கும் பதில் இல்லை. ஒற்றை செங்கல்லை வைத்து தம்பி உதயநிதி தமிழகம் முழுக்க சுத்துனாரே, அதுக்கு அப்புறமாவது ஒரு வெட்கம் வந்திருக்க வேண்டாமா?

தம்பி செங்கல்லுடன் புறப்பட்டா

தம்பி செங்கல்லுடன் புறப்பட்டா

நாடாளுமன்றத் தேர்தல் வருதே தம்பி இன்னொரு செங்கல்லுடன் புறப்படுவானேனு ஒரு பயம் வருதா? கருணாநிதியின் பேனா எப்போதெல்லாம் குனிந்ததோ அப்போதெல்லாம் தமிழகம் தலை நிமிர்ந்தது. கருணாநிதியின் பேனா பல முன்னோடி திட்டங்களை தமிழகத்திற்கு கொடுத்துள்ளது. வள்ளுவர் கோட்டத்தை உருவாக்க பாடுபட்ட பேனாதான் கருணாநிதியின் பேனா.

கருணாநிதியின் பேனா

கருணாநிதியின் பேனா

டைடல் பார்க் உருவாக்க கையெழுத்திட்ட பேனா கருணாநிதியின் பேனா. குடிசைகளை அடுக்குமாடி குடியிருப்புகளாக கட்ட உத்தரவிட்ட பேனா கருணாநிதியின் பேனா. லட்சக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்க காரணமாக இருந்ததும் கருணாநிதியின் பேனாதான். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியது கருணாநிதியின் பேனா. நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவிற்கு விடியல் ஏற்படுத்தித் தரக் கூடியதாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+