ஆளுநரே.. திராவிடம் காலாவதியான கொள்கை அல்ல.. சனாதனத்தை காலாவதியாக்கிய கொள்கை.. முழங்கிய ஸ்டாலின்!
சென்னை : "மாண்புமிகு ஆளுநருக்கு சொல்கிறேன். திராவிடம் என்பது காலாவதியான கொள்கையல்ல. சனாதனம், வர்ணாசிரமம், மனுநீதி, சாதியின் பெயரால் இழிவு செய்யப்படுவது, பெண் என்பதால் புறக்கணிப்பது ஆகியவற்றை எல்லாம் காலாவதியாக்கியதுதான் திராவிடம். அதனால்தான் திராவிடத்தைப் பார்த்து ஆளுநர் பயப்படுகிறார்." என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டாம் ஆண்டை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் மே 7,8,9 ஆகிய மூன்று நாட்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக, காஞ்சிபும் வடக்கு மாவட்டம், கண்டோன் மெண்ட் பல்லாவரத்தில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ரவியின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ஆங்கில நாளிதழுக்குப் பேட்டி அளித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, "திராவிட மாடல் நிர்வாகம் என்பது ஓர் வெற்று அரசியல் முழக்கம். திராவிடம் என்ற காலாவதியான சித்தாந்தத்தை நிலைநிறுத்த முயற்சிக்கின்றனர்" என்று விமர்சித்திருந்தார். இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தன.

இநிந்லையில், இன்று நடைபெற்ற திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "மாண்புமிகு ஆளுநருக்கு சொல்கிறேன். திராவிடம் என்பது காலாவதியான கொள்கையல்ல. சனாதனம், வர்ணாசிரமம், மனுநீதி, சாதியின் பெயரால் இழிவு செய்யப்படுவது, பெண் என்பதால் புறக்கணிப்பது ஆகியவற்றை எல்லாம் காலாவதியாக்கியதுதான் திராவிடம்.
அந்நிய படையெடுப்பாக இருந்தாலும், ஆரிய படையெடுப்புகளாக இருந்தாலும், அதனை வீழ்த்தும் ஆயுதம்தான் திராவிடம். அதனால்தான் திராவிடத்தைப் பார்த்து ஆளுநர் பயப்படுகிறார்." என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications