Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

4 மணி நேர ‘உறக்கம்’.. பொறுப்பாளர்களை போனில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கும் ஸ்டாலின்! அறிவாலய அலர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் தலையெழுத்தைத் தீர்மானிக்கப்போகும் அந்த நாள் வர இன்னும் சரியாக ஒரு வாரமே இடைவெளி இருக்கிறது. தேர்தல் களம் உச்சகட்ட 'கிளைமாக்ஸ்' காட்சியை எட்டியிருக்கும் வேளையில், ஆளுங்கட்சி தரப்பில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு ராணுவக் கட்டுப்பாட்டுடன் காய்களை நகர்த்தத் தொடங்கியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

tamil nadu assembly elections 2026 congress

நித்திரையை வென்ற நிமிடம்!

"விடியல் அரசு" எனப் பெயர் எடுத்தாலும், தற்போது விடிய விடியத் தூக்கத்தைத் துறந்து தேர்தல் பணியில் மூழ்கிக் கிடக்கிறார் முதல்வர். 24 மணி நேரத்தில் வெறும் நான்கு மணி நேரத்தை மட்டுமே ஓய்வுக்காக ஒதுக்கிவிட்டு, மீதமிருக்கும் பொன்னான நேரத்தை முழுமையாகப் போர்க்களப் பணிகளுக்காகச் செலவிட்டு வருகிறார்.

தொகுதி நிலவரம், பிரச்சார வியூகம், வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு என அவரது மூளை ஒரு சூப்பர் கம்ப்யூட்டரைப் போலச் சுழன்று கொண்டிருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் வியப்புடன் தெரிவிக்கின்றன. சோர்வு என்பதே தெரியாமல் சுழலும் அவரது வேகம், இளம் உடன்பிறப்புகளுக்கே சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஐந்து முனைகளில் ஒரு முற்றுகை!

தேர்தல் வியூகத்தை மிகவும் நுணுக்கமாகக் கையாண்டு வரும் ஸ்டாலின், ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் ஐந்து முக்கியப் பிரிவுகளாகப் பிய்த்து மேய்ந்து வருகிறார்.

மகிழ்ச்சியான சென்னை

கோட்டையாகக் கருதப்படும் வடக்கு

சவால்கள் நிறைந்த மேற்கு

விவசாயம் செழிக்கும் டெல்டா

அரசியல் உணர்வு மிக்க தெற்கு

இப்படி மண்டல வாரியாகப் பிரித்து, ஒவ்வொரு ஏரியாவிலும் நிலத்தடி நிலவரம் என்ன என்பதைத் துல்லியமாக ஆராய்ந்து வருகிறார். தனக்கு வரும் உளவுத்துறைத் தகவல்கள் மற்றும் தனிப்பட்ட டீம் கொடுக்கும் புள்ளி விவரங்களை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு தொகுதியின் நாடித்துடிப்பையும் விரல் நுனியில் வைத்துள்ளார்.

லைன்ல வாங்க... நறுக் கேள்விகள்!

வெறும் மேடைப் பேச்சோடு நின்றுவிடாமல், களத்தில் தொய்வு ஏற்படும் இடங்களைக் குறிவைத்து அவர் நடத்தும் 'ஆபரேஷன்' தான் இப்போது ஹாட் டாபிக். திமுக சற்றே பின்னடைவைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகத் தனக்குக் கிடைக்கும் ரகசியத் தகவல்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பகுதிப் பொறுப்பாளர்களைத் தொடர்பு கொள்கிறார்.

பாசமான முதல்வர் என்பதைத் தாண்டி, ஒரு கண்டிப்பான தலைமை ஆசிரியராக மாறி அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கிறார். தமிழகத்தை சென்னை, வடக்கு, மேற்கு, டெல்டா மற்றும் தெற்கு என மண்டலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திலும் நிலவரம் என்ன? என்பது பற்றி தினமும் விசாரணை நடத்தி வருகிறார் ஸ்டாலின். இந்த மண்டலங்கள் குறித்து தமக்கு அளிக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில், எந்தெந்த பகுதிகளில் பலவீனமாக திமுக இருக்கிறது என சொல்லப்படுகிற ரிப்போர்ட்டை வைத்து அந்த பகுதிகளின் பொறுப்பாளர்களை ஃபோனில் பிடித்து லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார். பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார்கள் பொறுப்பாளர்கள்.

"அங்கே வேலை ஏன் முடங்கிக் கிடக்கு? நான் சொன்ன டார்கெட் என்னாச்சு? காரணத்தைச் சொல்லுங்க..." என அவர் வீசும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் நிர்வாகிகள் வியர்த்துப் போயுள்ளனர்.

அலட்சியமாக இருந்த பல மாவட்டப் புள்ளிகளுக்கு 'டோஸ்' விழுந்த செய்திகள் இப்போது கட்சிக்குள் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. "தலைவர் இவ்வளவு விவரமா இருப்பார்னு எதிர்பார்க்கல" எனத் திக்கித் திணறிப் போய் நிற்கிறார்கள் சீனியர் நிர்வாகிகள்.

இந்தக் கடைசி ஒரு வாரம், தூக்கத்தைத் தொலைத்துவிட்டுப் பதற்றத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறது அறிவாலயப் படை!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+